உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
‘ஸ்பேஸ்புக்’ என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது.
வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார்.
மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது.
ஏசர் நிறுவனமும் இரட்டைத் திரைகளைக் கொண்ட மடிக் கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்