பொருள் விவரப்பட்டியல் எனப்படும் இன்வாய்ஸ் பில்களை கடைகளில், நிறுவனங்களில் எதேனும் பொருள்களை வாங்கும் போது கொடுப்பார்கள். நமது கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்வாய்ஸ் பில் கொடுக்க எதாவது மென்பொருள்களை (Customized Softwares) போட்டிருக்க வேண்டும். சிலர் MS-Excel மென்பொருளில் கை வலிக்க அடித்து அதை அழகுபடுத்தி அச்சிட்டுக் கொடுப்பார்கள். சிலர் டேலி மென்பொருளை நாடுவார்கள். உடனே அவசரமாக பில் தேவைப்படுகிறது என்ன செய்வீர்கள்?
எந்த மென்பொருளின் துணையின்றியும் அதிக வேலையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி ஆன்லைனில் இன்வாய்ஸ்களை உருவாக்கலாம். பல இணையதளங்கள் இந்த சேவையை இலவசமாக கொடுப்பதில்லை. சில இணையதளங்கள் இரண்டு முறை மட்டும் இலவசமாக உருவாக்க இடம் கொடுக்கின்றன. சில தளங்கள் ரெஜிஸ்டர் செய்தால் தான் வேலையைச் செய்ய அனுமதிக்கும். இந்த கட்டாயங்கள் எதுவுமின்றி இலவசமாக இன்வாய்ஸ்களை விரைவாக உருவாக்க இரண்டு தளங்கள் உதவுகின்றன.
1.Billable
இந்த தளம் வேலையை விரைவில் செய்து நேரத்தை மிச்சப்படுத்த எளிமையான முறையில் படிவமாக (Forms) வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த படிவத்தில் உள்ள தலைப்புகளை எடுத்துவிட்டு உங்களுக்குத் தேவையான வார்த்தைகளை (Company Name, Address, Invoice No, Date, Items) நிரப்பிக் கொள்ளலாம். பொருள்களின் பெயர், எண்ணிக்கை, விலை கொடுத்தால் கூடுதல், VAT வரி மதிப்பு எல்லாமே சுலபமாக வந்துவிடும்.
இன்வாய்ஸ் உருவாக்கியபின் அப்படியே அச்சிட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் PDF கோப்பாக தரவிறக்கும் வசதியும் உள்ளது. http://billable.me/
2. InvoiceTo Me
இது ஒரு Template வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மேற்கண்ட தளத்தை விட அதிக வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பில்லின் தோற்றமும் சிறப்பான நிலையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
பொருள்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பட்டியலின் வரிசைகளைக் கூட்டிக் கொள்ள முடியும். தேவையில்லை எனில் அதிகமாக இருக்கிற வரிசைகளைக் குறைக்கவும் முடியும்.
இன்வாய்ஸ் உருவாக்கி முடித்ததும் PDF கோப்பாக கணிணிக்குத் தரவிறக்கலாம். இதில் நேரடியாக பிரிண்ட் செய்யும் வசதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். http://invoiceto.me/
இந்த இரண்டு தளங்களும் இன்வாய்ஸ்களை உருவாக்கவும் பழகவும் பயன்படுத்த வேண்டிய அருமையான தளங்களாகும்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்