http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com கோப்புப் பகிர்வான் தளங்களில் இருந்து கோப்புகளைத் தரவிறக்க இலவச மென்பொருட்கள்

a

மிகப்பெரிய கோப்புகளை  நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள  (File sharing) ரேப்பிட்ஷேர், மெகா அப்லோட் போன்ற தளங்கள் உதவுகின்றன. இவற்றில் மெகாகோப்புகளை தரவேற்றி  (Upload) கிடைக்கும் சுட்டியை (links) நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இசை, திரைப்படம், மென்பொருட்கள், கோப்புகள் போன்ற் மெகா கோப்புகளை (Large files) பிறருடன் பகிர்வதற்கு இந்த தளங்களைப் பயன்படுத்தாதோர் மிகக் குறைவு.
கோப்புப் பகிர்வான் தளங்களில் இருந்து கோப்புகளைத் தரவிறக்க இலவச மென்பொருட்கள்
கோப்புப் பகிர்வான் தளங்களில் இருந்து கோப்புகளைத் தரவிறக்க இலவச மென்பொருட்கள்
ரேப்பிட்ஷேர், மெகாஅப்லோட், ஹாட்ஃபைல்  (Rapidshare, Megaupload, Hotfile) போன்ற தளங்களில் கட்டணம் செலுத்தி அங்கீகார உறுப்பினராக  (Premium User) ஆகலாம். அல்லது கட்டணம் செலுத்தாமல் இலவச அங்கத்தினராகவும் (Free user) இருக்கலாம்.
இலவசப் பயனர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்தும்போது சில சங்கடங்களைச் (Restrictions, Limitations) சந்திக்க நேரிடும்.
அவை :
  • தரவிறக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
  • சிலபல நேரங்களில் கேப்சா (CAPTCHA)எனப்படும் சங்கேதக்குறியீடுகளை தட்டச்சு செய்ய நேரிடும்.
  • ஒரு குறிப்பிட்ட ஐபி முகவரி  (IP Address) வாயிலாக ஒரு நேரத்தில் ஒரே ஒரு கோப்பை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
  • தரவிறக்கத்தைப் பாதியில் நிறுத்தி மீண்டும் தொடரும் வசதி கிடையாது (Resume).
ரேப்பிட்ஷேர், மெகாஅப்லோட், ஹாட்ஃபைல், ஃபைல்சர்வ் தளங்களில் இருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்ய உதவும் இலவச மென்பொருட்கள் : ஜேடவுன்லோடர், மைபோனி, எம்டவுன்லோடர்.
ஜேடவுன்லோடர் : ஜாவா மொழியில் எழுதப்பட்ட நிரலைக் கொண்டது. ஆகவே இதை பயன்படுத்தும் முன்னர் ஜாவாவை (JAVA) உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். இதன் மூலவரைவு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது (Open Source).
எம்டவுன்லோடர் : இதைப் பயன்படுத்தும் முன்னர் உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் (Microsoft Dot Net Framework) நிறுவ வேண்டும்.
தரவிறக்கச் சுட்டி :   http://goo.gl/BYqjF

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post