“சொந்த வீடு, வாடகை வீடு அப்புறம் இன்ஸ்டால்மென்ட்டுல கூட வீடு இருக்கு தெரியும். ஆனா, இது என்ன புதுசா இணையவீடு(?) ஒன்னும் புரியலையே?!” அப்படீன்னு ரொம்ப குழம்புற மக்களே அமைதி, அமைதி!
பொதுவா நம்ம வீட்டுல என்னென்ன வச்சிருக்கோம்? உண்ண உணவு, உடுக்க உடை இது தவிர ஆடம்பரத்துக்காக பல பொருட்கள் அப்புறம், ரொம்ப முக்கியமா சொல்லனும்னா, ” வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப் படும்”(அனுமதி இல்லாம ஒரு குறளை அப்படியே உல்டாவா சொன்னதுக்காக திருவள்ளுவர் மன்னிப்பாராக?!) அப்படீங்கிற ஒரு மனப்பான்மையில நாம படிக்கவும், நம்ம குடும்பத்தைச் சார்ந்தவங்க படிக்கவும் பல புத்தகங்கள்னு இதெல்லாம்தானே வச்சிருக்கோம்!
மேல சொன்ன அதே கதைய அப்படியே இணையதளத்துக்கு கொண்டு வாங்க. இப்போ சொல்லுங்க, இணையத்துல ஒரு வீடுன்னு நமக்கு இருந்ததுன்னா, அதுல என்ன வச்சிக்கலாம்? நம்ம படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கேளிக்கைத் தொடர்பான பாடல்கள், படங்கள், அலுவலக கோப்புகள்னு இப்படி நெறைய சேமிச்சு வைக்கலாம்தானே?
ஐய்ய….இதையெல்லாம் வச்சிக்கத்தான் எங்ககிட்ட டெர்ரா பைட் அளவு வரைக்கும் ஹார்டு டிஸ்க் இருக்கேன்னு சொல்றீங்களா? உண்மைதாங்க, ஆனா உங்க டெர்ரா பைட் அளவுள்ள ஹார்டு டிஸ்கை போற எடத்துக்கெல்லாம் தூக்கிட்டு போக முடியுமா உங்களால. அப்படியே முடியும்னாலும், எல்லா சமயங்கள்லயும் அது தேவைப்படாதே!
ஆக, இணையவசதி இருக்குற எல்லா இடங்கள்லயும் பயன்படுத்துற மாதிரி இணையத்துலயே ஒரு ஹார்டு டிஸ்க் இருந்தா நல்லா இருக்கும் இல்லியா? அப்படி இணையத்துல இருக்குற ஹார்டு டிஸ்க்கைத்தான் நான் இணையவீடுன்னு சொன்னேன்!
“ஐய்ய…..தோடா, வன்ட்டுகிறாரு தமிழ் வாத்தியாரு! இத ஹார்டு டிஸ்க்/இன்டர்னெட் ஸ்டோரேஜ்னு முன்னாடியே சொல்ல வேண்டியதுதான”, அப்படீன்னு அலுத்துக்கிற நண்பர்களே, தமிழ்ல இதுவும் ஒரு புது கலைச்சொல்லா இருந்துட்டு போகட்டுமேன்னு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி (?) விட்டுட்டு மேல படிங்க.
இணையத்துல நம்ம கோப்புகள வச்சிக்க வசதி இருக்குன்னாலும், அதுல எல்லாமே அதிக கட்டணத்துடன் கூடிய ஒரு சேவையாத்தான் இருக்கு. இலவசமா இருக்குற ஒரு சில சேவைகளும் “மெகா பைட் (MB) “அளவுலதான் இருக்கு. ஆனா, நான் இப்போ உங்களுக்குச் சொல்ல போறது, “கிகா பைட் (GB)” அளவுல கிடைக்கிற, ஆனா முற்றிலும் இலவசமான ஒரு சில சேவைகளப் பத்தித்தான். அது என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க……
50 கிகா பைட்டில் (50 GB) இலவச இணையவீடு!
இந்தச் சேவையை பயன்படுத்த நீங்க www.adrive.com அப்படீங்கிற இணையத்துக்குப் போய் ஒரு கணக்கு ஒன்னு திறக்கனும்/தொடங்கனும்.
இந்தத் சேவையில/தளத்துல ஒரு கவர்ச்சிகரமான விஷயம் என்னன்னா, “ட்ராக் அண்டு ட்ராப் (Drag and Drop)” அப்படீங்கிற ஒரு வசதி இருக்குங்கிறதுதான். அதாவது, உங்களோட கோப்புகள் எல்லாத்தையுமே நீங்க உங்க மௌஸால/கர்சரால இழுத்து போட்டுடலாம். கட் காபி பேஸ்ட் அப்படீன்னு எப்பவும்போல நீட்டி முழக்கத் தேவையில்லை!
ஆனா, அழகு/கவர்ச்சி இருக்குற இடத்துல ஆபத்தும் இருக்கும்ங்கிறதுக்கு ஏத்தமாதிரி, இந்தத் தளம் புதியது அப்படீங்கிறதுனால, நம்ம கோப்புகள் எல்லாம் பாதுகாபா இருகும்கிறதுக்கு உத்தரவாதம் இல்லைங்கிறத நியாபகத்துல வச்சிக்கிட்டு இந்தத் தளத்தை பயந்படுத்துறது நல்லது! அதுமட்டுமில்லாம தரவேற்ற (Upload) வேகம் குறைவுங்கிறதும் ஒரு சின்ன பிரச்சினைதான்!
25 கிகா பைட்டில் (25 GB) இலவச இணையவீடு!
இந்தச் சேவையை பயன்படுத்த நீங்க இங்க http://skydrive.live.com போகனும். இந்தச் சேவையை பயன்படுத்தவும் ஒரு கணக்கு தொடங்கியாகனும். அது விண்டோஸ் லைவ் அக்கவுண்ட்! ஆனா, இந்தச் சேவையை நீங்க தைரியமா பயன்படுத்தலாம். ஏன்னா, இத கொடுக்கிறது நம்ம இணைய உலக ஜாம்பவான்கள் ஒன்றான மைக்ரோசாப்ட்!
மக்களே…இதிலும் “ட்ராக் அன்ட் ட்ராப்” வசதி (அடிப்படையில் இல்லைன்னாலும்) ஏற்படுத்திக்கலாம்! SDE எனும் வேற்று நிறுவன மென்பொருள் ஒன்றைஇங்கிருந்துதரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அப்புறமென்ன உங்கள் பாடு கொண்டாட்டம்தான். எல்லாக் கோப்புகளையும் எங்கிருந்து வேண்டுமானாலும் இழுத்தே போட்டுக்கொள்ளலாம் உங்கள் இணையவீட்டுக்குள்! சந்தோஷம்தானே?
இந்தச் சேவைவை தர்ர நிறுவனம் www.mozy.com. இந்தச் சேவையை நீங்க நம்பி பயன்படுத்தலாம். ஏன்னா, இது இணையத்துல ரொம்ப வருடமா இந்தச் சேவையை செய்து வருகிற நிறுவனம். அதுமட்டுமில்லாம, இதுல நல்ல பயணர் இடைமுகம் (user interface) இருக்குறதுனால பயன்படுத்துறது மிகவும் எளிமை. கூடுதலா, பி.சி (PC) மற்றும் ஆப்பிலோட மேக் (Mac) கணிகள் இரண்டிலுமே நீங்க பயன்படுத்த முடியும்!
“Dropbox” எனும் 2 கிகா பைட்டில் (2GB) ஒரு அழகிய இணையப்பெட்டி!
இந்தச் இணையச்சேவை ஒரு நல்ல சேவைன்னு சொல்லலாம். ஏன்னா, உங்க கணினியோட நல்லா ஒருங்கிணைந்து செயல்படுகிர ஒரு அழகிய சேவை இது! இலவசமா வெறும் 2GB தான் கிடைக்கும்னாலும், கட்டணுத்துக்கு அதிகமான அளவு கிடைக்கும். இந்தச் சேவையை பயன்படுத்த www.dropbox.com அப்படீங்கிற இணையதளத்துக்குப் போய் ஒரு கணக்குத் தொடங்கி பயன்படுத்துங்க!
மக்களே இந்தப் பதிவுல நான் குறிப்பிட்டிருக்கிற தளங்களை எல்லாம் நான் பயன்படுத்தியிருக்கேன். அதனால, என்னோட அனுபவத்துல நான் புரிஞ்சிக்கிட்ட விஷயங்களைச் சொல்லியிருக்குறேன். மத்தபடி உங்களுக்கு ஏத்த மாதிரியான தளங்களை தேர்வு செஞ்சு பயன்படுத்துங்க.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்