http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com பயர்பாக்ஸில் டவுன்லோட் முடிந்தவுடன் அலாரம் அடிக்கச் செய்ய

a

இதற்கு முன் ஃப்ரீ டவுன்லோட் மேனஜரில் தரவிறக்கம் முடிந்தவுடன் அலாரம் அடிக்கச் செய்ய என்ன செய்யவேண்டும் என பதிவிட்டு இருந்தேன். இப்போது அன்றாடம் நாம் பயன்படுத்தும் உலவியான நெருப்புநரி என செல்லமாக அழைக்கப்படும் ஃபயர்பாக்ஸில் டவுன்லோட் முடிந்தவுடன் ஒரு MP3 / WAV கோப்பினை இசைக்கச் செய்வது எப்படி என பார்ப்போம்.
Download Notification in Firefox Browser
Download Notification in Firefox Browser
இந்த நெருப்புநரிக்கான ஆட் ஆன் பெயர் Auto Shutdown NG. இதை உங்கள் ஃபயர்பாக்ஸுடன் நிறுவிக்கொள்க. ToolsAdd-ons Manager ல் Auto Shutdown NG ஐ தெரிவு செய்க. Options அழுத்தவும். உங்கள் கண் முன்னே ஒரு புதிய Dialog Box தோன்றும். அதில் Notification Time (Seconds) இதில் 1 என தட்டெழுதவும். Command என்னும் இடத்தில் Predefined Commands தெரிவு செய்க. Executable என்னும் இடத்தில் உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள ஏதேனும் ஒரு MP3/WAV கோப்பின் முழுமையான பெயரை அதன் Drive Letter, Path உடன் கொடுக்கவும். பிறகு அதை Save செய்யவும். நான் C:\windows\system32\LoopyMusic.wav என்பதை தேர்ந்தெடுத்தேன். இனி எப்போதெல்லாம் நீங்கள் எதையாவது இந்த ஃபயர்பாக்ஸ் வாயிலாக தரவிறக்கம் / டவுன்லோட் செய்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் தரவிறக்கம் முடிந்த நிகழ்வை இனிய ஒலி / இசையுடன் உங்களுக்கு தெரியப்படுத்த இந்த நீட்சி தவறாது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post