இன்ஸ்டால்லர் என்பது உங்களது கணினியில் புதிய மென்பொருட்களை நிறுவுவதற்காக எழுதப்பட்ட சிறப்பு அப்ளிகேசன்.
ஆனால் சில நேரங்களில் ஏற்கனவே நிறுவப்பட்ட மென்பொருட்களை அழிக்க முயலுகையில் இடைஞ்சல் ஏற்பட்டு பாதியில் பிரச்சினை வரும். நீங்கள் அழிக்க நினைத்த அப்ளிகேசன் முழுவதும் அழிந்தும் தீராது. அனின்ஸ்டால் செய்வது அந்த நேரத்தில் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.
அதற்கு என்னதான் தீர்வு. எந்த இடைஞ்சலும், சிக்கலும் இல்லாமல் அனின்ஸ்டால் (பழைய - ஏற்கனவே நிறுவப்பட்ட மென்பொருளை அழிப்பது) செய்வதற்கு ரேவோ மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இது குறித்து மேலும் அதிகத் தகவல்களைப் பெறவும், மென்பொருள் தரவிறக்கம் செய்வதற்கும் ரேவோ தளத்திற்குச் செல்லலாம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்