http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ப்ரீ கமாண்டர் : இலவச மாற்று மென்பொருள்

a

விண்டோஸ் இயங்குதளத்தின் கோப்புகளை மேலாண்மை செய்வதற்காக பைல் மேனேஜர் உள்ளது. இதை விண்டோஸ் பயனர்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம் நாள்தோறும். இந்த பைல் மேனேஜர்க்கு மாற்றாக ப்ரீ கமாண்டர் ஐ பயன்படுத்தலாம். இதில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் உள்ளன. நெருப்பு நரி உலவியில் டேப் வசதியை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த டேப் வசதி ப்ரீ கமாண்டரிலும் உண்டு.
ப்ரீ கமாண்டர் : இலவச மாற்று மென்பொருள்
ப்ரீ கமாண்டர் : இலவச மாற்று மென்பொருள்
ஒரு கோப்பினை திறந்து பாராமலேயே, அதன் உள்ளே என்ன உள்ளது என்பதை அறியும் முன்னோட்ட வசதி ப்ரீ கமாண்டரில் உள்ளது. சுருக்கப்பட்ட போல்டரின் உள்ளே என்ன உள்ளது என்பதையும், அங்கே தேடுதல் வேட்டை நடத்தவும் உதவுகிறது.  இணையத்தின் எப் டி பி நுட்பம் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளின் பெயர்களை ஒரே நேரத்தில் மாற்றுவது  இதில் எளிமையாக்கப்பட்டுள்ளது. கோப்புகளை அழிப்பது, படி எடுப்பது, பெயர் மாற்றுவது, நகர்த்துவது போன்ற செயல்களை அனாயசமாக விரைவில் செய்ய முடிகிறது. மெகா கோப்புகளை துண்டுதுண்டாக உடைக்கும் ஸ்ப்ளிட்டிங்  வசதியும் உண்டு.
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டாவின் ஒத்திசைவு கொண்டது இது.  ஒரு யு எஸ் பி நினைவக கையடக்க கருவியில் ப்ரீ கமாண்டரை நகல் எடுத்து இதை எங்கேயும், எப்போதும் சந்தோஷம் சங்கீதமாக எந்த விண்டோஸ் கணினியிலும் பதிந்து, பகிர்ந்து  பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமே.
தரவிறக்க முகவரி : http://bit.ly/haiQ1h

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post