நமது கணினியில் எதாவது ஒரு பயன்பாட்டினை திறப்பதற்கு பெரும்பாலும் நாம் கணினி முகப்பில் இருக்கும் ஐகானை கிளிக் செய்வோம். அல்லது runல் சென்று அதன் பெயரை அடிப்போம். உதாரணமாக நெருப்பு நரி உலவியை திறக்க வேண்டும் என்றால் firefox என்று தவறில்லாமல் அடிக்க வேண்டும். மேலும் முழு வார்த்தையையும் அடிக்க வேண்டும். மேலும் கணினியில் நிறுவப்பட்ட பல பயன்பாடுகளை இதுபோல் திறப்பது என்பது சற்று கடினம் எனவே இந்த மென்பொருள் இது போன்று பயன்பாடுகளை தொடங்க வைப்பதற்கு நமக்கு ஒரு எளிய வழியை கொடுக்கிறது. உதாரணமாக firefox browserஐ திறக்க முதல் முறை fire என அடித்தால் அந்த வார்த்தை உள்ள அனைத்து மென்பொருட்களையும் காட்டும். நீங்கள் firefoxஐ தேர்வு செய்து அதனை திறந்து கொள்ளலாம். அடுத்த முறை நீங்கள் வெறும் fi என்று அடித்தவுடனே firefoxஇனை காட்டும். நீங்கள் உடனே எண்டர் தட்டி அதனை திறந்து கொள்ளலாம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்