http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெராவின் மூலம் கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்

a

அகச்சிவப்பு கமெரா இருந்தால் போதும் ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் அழுத்துகிற எண்களை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏடிஎம் கார்டுகளில் பல மோசடிகள் நடக்கின்றன. பிரத்யேக கருவிகள் மூலம் டூப்ளிகேட் போட்டு பணத்தை சுருட்டுகிறார்கள். இது உள்பட ஏடிஎம் முறைகேடுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது.

சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அணியும் இதில் கலந்துகொண்டது. அகச்சிவப்பு கமெரா மூலம் கடவுச்சொல்லை திருட முடியும் என்பதை அவர்கள் விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: இங்கிலாந்தின் ஸ்டிரவுட் நகரில் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் வாசலில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் மோசடி பேர்வழிகள் ஸ்கிம்மிங் கருவியை பொருத்தி இருந்தனர். அதில் கார்டை சொருகினால் வழக்கம் போல பணம் வரும். அதே நேரம் கார்டின் தகவல்கள், கடவுச்சொல் இரண்டும் அந்த கருவியில் பதிவாகிவிடும்.

அதே தகவல்களுடன் போலி கார்டு தயாரித்து பணத்தை சுருட்டினார்கள். ரகசிய எண் அழுத்துவதை பதிவு செய்யும் வகையில் ஏடிஎம் மையத்துக்குள் ரகசிய கமெரா பொருத்தியும் பல இடங்களில் மோசடி நடந்துள்ளது. அகச்சிவப்பு கமெரா இருந்தால்கூட மோசடி செய்ய முடியும்.

இந்த கமெராவை ஏற்கனவே பொருத்தியும் படமெடுக்கலாம். வாடிக்கையாளர்கள் வந்து பணத்தை எடுத்து சென்ற பிறகு படமெடுத்தாலும் கடவுச்சொல்லை கண்டுபிடிக்கலாம். எந்த பட்டனில் அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை அதில் மிச்சமிருக்கும் வெப்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்.

அவர்கள் முதலில் அழுத்திய பட்டனில் வெப்பம் குறைவாக இருக்கும். கடைசியாக அழுத்திய பட்டனில் அதிகம் இருக்கும். இந்த வித்தியாசத்தை வைத்து கடவுச்சொல்லை துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.

போலி கார்டு மட்டும் இருந்தால் பணம் திருடுவது கஷ்டமல்ல. ஆனாலும் பிளாஸ்டிக் பட்டனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உலோக பட்டன் என்றால் வெப்பத்தை அவை சீக்கிரம் உட்கிரகித்துவிடும். அதில் மிச்சம் இருக்கும் வெப்பத்தை அகச்சிவப்பு கமெராவில் பதிவு செய்ய முடியாது.

மோசடிகள் நடக்காமல் மக்கள் எந்த அளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நோக்கில் அவர்கள் இக்கருத்துகளை தெரிவித்தனர்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post