விண்டோஸ் இயங்குதளத்தில் ஒருங்கிணைந்த விண்டோஸ் மீடியா பிளேயர் (Windows Media Player) உள்ளது. இதன் மூலம் இசை, பாடல், காணொளி (video) அனைத்தையும் இயக்கி மகிழ்கிறோம். ஆடியோ சிடியின் (Audio CD Tracks) இசைத்தொகுப்பை அப்படியே கணினியில் பதியவோ (Ripping) , அல்லது கணினியில் உள்ள பாடல்களை ஆடியோ சிடியில் பதியவோ (Burn) விண்டோஸ் மீடியா பிளேயர் ஐ பயன்படுத்தவும் செய்யலாம். விண்டோஸ் இயங்குதளம், மற்றும் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் விண்டோஸ் மீடியா பிளேயர் ஐ பயன்படுத்தலாம்.
இந்த விண்டோஸ் மீடியா பிளேயர் க்கு ஏராளமான மாற்று பயன்பாடுகள் (Alternatives) இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பம்சம் வாய்ந்தவை. உலகெங்கும் மில்லியன் கணக்கான இசைப்பிரியர்கள் இந்த மென்பொருட்களை பயன்படுத்தி மகிழ்கின்றார்கள்.
- வீடியோ லேன் வி எல் சி
- கே எம் பிளேயர்
- வின் ஆம்ப்
- கோப்பி ட்ரான்ஸ் மேனேஜர்
- மீடியா மங்கி
- பூபார் 2000
- சாங் பேர்ட்
- அடாசிட்டி
- ஐ டியுன்ஸ்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்