கணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து வைக்கிறோம்? 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
Easeus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது. கணிணியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம் (Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது. இது கணிணி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. கணிணியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணிணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட டிஸ்கின் மூலம்
மொத்தத்தையும் மீட்க முடியும்.
2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.
3. Incremental Backup – இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப் பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.
4. இதிலிருந்து சிடி, டிவிடி, பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.
5. Backup Schedule – இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.
6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் (Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.
7. தற்போதைய ஹார்ட் டிஸ்கின் அனைத்தையும் நகலெடுத்து (Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்