http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com மைக்ரோசாப்ட் அப்டேட் பைல்கள் தேவையா?

a

ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளுக்கான அப்டேட் பைல்களைத் தருகிறது. இவற்றை இறக்கிப் பயன்படுத்துவதன் மூலம் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பு கூடுகிறது. பல நேரங்களில் இந்த அப்டேட் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பிற்கும் தேவையான பேட்ச் பைல்களைத் தருகின்றன. இன்டர்நெட்டில் இணைந்து பணியாற்றத் தொடங்குகையில் சில வேளைகளில் "மைக்ரோசாப்ட் அப்டேட் பைல்கள் உள்ளன. அவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்திடவா?' என்று ஒரு விண்டோ கேள்வி எழுப்பும். அல்லது நமக்குத் தெரியாமல் அப்டேட் செய்வதற்கான பைல்கள் இறக்கப்பட்டு பின் இவற்றை இன்ஸ்டால் செய்யட்டுமா என்ற கேள்வி தரப்படும். பெரும்பாலும் பலர் இது நல்லதற்குத்தானே என்று எண்ணி ஓகே கிளிக் செய்துவிடுகின்றனர். ஆனால் தற்போது பலருக்கு இது தேவையா என்ற எண்ணம் வருகிறது. இந்த எண்ணத்திற்கான காரணம் நாம் தான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தாமல் வேறு பிரவுசரையும் வேறு இமெயில் கிளையண்ட் புரோகிராம்களையும் பயன் படுத்துகிறோமே. இந்த அப்டேட் பைல்களால் நமக்கு பயன் இல்லையே என்று கருதுகின்றனர். இந்த எண்ணங்களும் கேள்விகளும் நியாயமானவை என்றாலும் இந்த கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கு வியப்பைத் தரும். இந்த அப்டேட் பைல்கள் கட்டாயம் தேவைதான். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நீங்கள் பயன்படுத்தும் வரை இந்த அப்டேட் பைல்கள் கட்டாயம் தேவைதான். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகு ப்பு விண்டோஸ் இயக்கத் தொகுப் பின் ஒரு அம்சம் தான். அதில் விண்டோஸ் இயங்குவதற்கான சில புரோகிராம் கோடிங் இருக்கின்றன. அது வெறும் வெப் பிரவுசர் மட்டுமல்ல.


மேலும் இதில் உள்ள சில மாட்யூல்களை எச்.டி.எம்.எல். செயல்பாட்டுத் தொகுப்பு பயன் படுத்துகிறது. எனவே இந்த அப்டேட் பேட்ச் பைல்களைப் பயன்ப டுத்தாவிட்டால் எச்.டி.எம்.எல். செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். இது ஒரு எடுத்துக் காட்டு தான். இதைப் போல பிற புரோகிராம்களும் பாதிக்கப்படலாம். எனவே நீங்கள் எந்த பிரவுசர் பயன்படுத்தினாலும் மைக்ரோசாப்ட் தரும் அப்டேட் பைல்களை இறக்கி இன்ஸ்டால் செய்வது உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டைப் பாதுகாக்கும். எனவே ஒவ்வொரு மாதமும் அப்டேட் பைல்களை இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post