http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com பைல்களை தானாகவே வேறிடத்தில் பேக்கப் செய்ய

a

முக்கியமான பைல்களில் பணியாற்றிக் கொண்டிருக்குமபோது அவ்வப்போது அவற்றை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. திடீரென பணியாற்றிக் கொண்டிருக்கிற பைல் பழுதடைந்தால் அல்லது இப்பொழுது செய்த மாற்றங்கள் வேண்டாம் பழைய பைலே போதுமானது என நினைத்தால் பேக்கப் செய்யப்பட்ட பைலை திறந்து கொள்ளலாம்.

மைக்ரோசாப்டின் வேர்ட் மற்றும் எக்செல் ஆகியவற்றில் Autosave வசதி உண்டு. வேர்ட் டாக்குமெண்டை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மைக்ரோசாப்ட் வேர்டே தானாக பாதுகாத்துக்கொள்ளும். அதுபோல் எக்செலிலும் உண்டு. நாம் Autosave வசதியை பற்றி இந்த கட்டுரையில் படிக்கப் போவதில்லை. மாறாக Auto Backupபற்றி படிக்கப் போகிறோம். வேர்டிலும், எக்செலிலும் தானாகவே பேக்கப் செய்கிற வசதி உண்டு. அவற்றை எப்படிக் கொண்டு வருவது எனப் பார்ப்போம்.

வேர்டில் பேக்கப்: வேர்ட் 97/2000/2002ஐ வைத்துள்ளவர்கள் Tools=>options கட்டளையை கிளிக் செய்ய வேண்டும். Save டேபைபின்பு அழுத்த வேண்டும். Always create backup copy என்ற செக் பாக்ஸைத் தேர்வு செய்து Ok செய்யவேண்டும்.


இனிமேல் வேர்டில் உள்ள பைல்கள் பேக்கப் செய்யப்படும். எப்படி? எவ்வாறு? எடுத்துக்காட்டாக Sample.DOC என்ற பைலைத்திறந்து வேண்டிய மாறுதல்களையும், புதியனவற்றையும் சேர்த்து பின்பு அந்த பைலைப் பாதுகாக்கிறீர்கள் எனவைத்துக்கொள்ளுவோம். உடனே Backup of Sample.WBK என்ற பேக்கப் பைலை வேர்ட் உருவாக்கிவிடும். அதில் Sample.DOC பைலில் ஏற்கனவே உள்ளவை அப்படியே இருக்கும்.

எக்செலில் பேக்கப்: எக்செல் 97/2000/2002ஐ வைத்துள்ளவர்கள் எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள். File=>Save As கட்டளையை கொடுங்கள். Save As என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் உள்ள Tools பட்டனை அழுத்துங்கள். General options பட்டனை அழுத்துங்கள். Always create backup என்ற செக்பாக்ஸில் டிக் அடையாளத்தை கொண்டு வந்து Ok மற்றும் Save பட்டன்களை அழுத்துங்கள்.

இனிமேல் எக்செலில் அந்த பைல்கள் எப்பொழுதும் பேக்கப் செய்யப்படும். எடுத்துக்காட்டாக Estimate.XLS என்ற பைலை திறந்து அதில் பணியாற்றுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த பைலை நீங்கள் பாதுகாத்தவுடன் Backup of Estimate.XLK என்ற பெயரில் அந்த பைலை எக்செல் உருவாக்கி விடும். அதில் Estimate.XLS பைலில் ஏற்கனவே இருந்தவை அப்படியே வந்துவிடும்.

பைல்களை வேறொரு டைரக்டரிக்கு பேக்கப் செய்ய: மைக்ரோசாப்டின் வேர்ட் மற்றும் எக்செல் ஆகியவற்றில் தானாகவே பேக்கப் எடுக்கும் வசதியைப் பார்த்தோம். இந்த இரண்டையும் தவிர வேறு அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள். அவற்றில் பேக்கப் வசதி இருக்கும் என்று கூற முடியாது. அப்படியானால் அவற்றில் பேக்கப் எடுக்க என்ன செய்ய?

வேர்டிலும், எக்செலிலும் உருவாகிற பேக்கப் பைல்களும், மூல பைல்களும் ஒரே டைரக்டரியில்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக C:×Data டைரக்டரியில் உள்ள Sample.DOC மற்றும் Estimate.XLS பைல்களின் பேக்கப் பைல்களும் அதே C:×Data டைரக்டரியில்தான் உருவாகும். அவை வேறு டைரக்டரியில் உருவாகாது. அவற்றை வேறொரு டைரக்டரியில் பேக்கப் எடுக்க என்ன செய்ய?

மேற்படி இரு கேள்விகளுக்கும் விடை, எக்செலையும், வேர்டையும் பயன்படுத்தாமல் பேக்கப் செய்வதற்கான சிறப்பு சாப்ட்வேர்களில் ஒன்றைப் பயன்படுத்துவது என்பதுதான். அப்படிப்பட்ட சிறப்பு சாப்ட்வேர்களில ஒன்று Save and Backup ஆகும். இதை www.bygsoftware.com/saveandbackup.htm என்ற தளத்தில் இருந்து டவுன்லோடு செய்யலாம். எந்த பைலை நீங்கள் பாதுகாத்தாலும் சரி, உடனே அதன் மூல பைலை நீங்கள் குறிப்பிட்டுள்ள டைரக்டரியில இந்த சாப்ட்வேர் காப்பி செய்துவிடும்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post