http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க:

a

நண்பர்களே! ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர்,பெயின்ட்,எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல்.இன்னும் பல எக்ஸ்பியில் உள்ள புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள்.ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு எக்ஸ்பியிலேயே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான் சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான கமாண்ட் ஆனது நம்முடைய விருப்பப்படி இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் அல்லவா? அதற்கு உதவ ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அப்படியே ரன் செய்து இயக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், மிகவும் உபயோகமானது ஆகும். இப்போது வழிமுறைகளை பார்க்கலாம்.
1.பதிவிறக்கம் செய்த சிப் பைலை  எக்ஸ்ட்ராட் செய்து கொள்ளுங்கள். போல்டரில் உள்ள exe பைலை ரன் செய்தால கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் select-ஐ தேர்வு செய்யவும்
01_1 
2. தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான மென்பொருளின் போல்டரை ஓப்பன் செய்து கொள்ளவும்
  02_1
3.உதாரணத்திற்கு நான் cclener-மென்பொருளை ஓப்பன் செய்துள்ளேன்.பிறகு மென்பொருளின் exe-கோப்பை மட்டும் செலக்ட் செய்து ஓப்பன் என்று கொடுக்கவும்
03_1

4.அப்படி கொடுத்த பிறகு கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் input the alias என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கவும்.நான் cclener என்பதை சுருக்கமாக cc என்று கொடுத்துள்ளேன்.பிறகு Add என்ற பட்டனை அழுத்தவும்
04_1
5.உங்கள் செயல் வெற்றிகரமாக செயல்பட்டதை உணர்த்தும் விதமாக ஓரு செய்தி இப்படி தோன்றும். இதில் ok- கொடுக்கவும்.பிறகு விண்டோக்களை மூடி விடவும் அல்லது குளோஸ் செய்யவும்.
05_1
6. ஸ்டார்ட் மெனு சென்று ரன்-ஐ திறந்து கொள்ளுங்கள்.அல்லது  windowskey+R ஐ அழ்த்தி ரன்-ஐ திறக்கலாம்.இதில் நீங்கள் ஏற்கனவே alias பகுதியில் மென்பொருளுக்கு வைத்த பெயரை டைப் செய்து ஓ.கே கொடுக்கவும்.
07_1
7.அவ்வளவுதான் இப்போது நீங்கள் தேர்வு செய்த மென்பொருள் ஓப்பனாகி விடும்.
 08_1
நண்பர்களே! எனக்குத் தெரிந்தவரை விளக்கியிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி
மென்பொருளை தரவிறக்கம் செய்ய:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post