http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்

a

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை நாம் வாசிக்கப் பல மென்பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக அடோபி PDF Reader-ன் சமீபத்திய வெளியீடுகள் PDF கோப்புகளை நாம் கேட்கும்படி வாசிக்கும். மைக்ரோசாப்ட் ரீடர் மென்பொருளும் இதுபோன்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது. MS reader கோப்புக்களாக ஆயிரக்கணக்கான ஆங்கில மின்னூல்கள் வர்ஜினியா பலகலைக்கழக மின்னிலக்கநூலகத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்க இதுபோன்ற வாசிப்பிகள் இல்லாமல் இருந்தது. குறள் சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய குறள் மென்பொருள் தொகுப்பில் உள்ள கவிதை செயலி தமிழை வாசிக்கிறது. இந்தக் "கவிதை செயலி" மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற ஒரு செயலி. தமிழ் வாசிப்பி என்பது இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது. யுனிகோடில் எழுதப்பட்டுள்ளவற்றை அதனால் வாசிக்க இயலவில்லை. ஆனால் TSCII -யில் எழுதப்பட்டுள்ளவற்றை மழலை மொழியில் வாசிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விரும்புபவர்கள் இந்த இலவசச் செயலியை முயற்சித்துப் பார்க்கலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post