http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com புகைப்படத்தில் வெள்ளம் வரவழைக்க

a

போட்டோஷாப் பதிவுகள் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.இன்று போட்டோஷாப் பதிவில் வெள்ளம் வரவழைப்பது எப்படி என்று பார்க்கலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிளக்கின்ஸ் பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.வெள்ளம் வந்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
முதலில் நீங்கள் பிளக்கின்ஸ்ஸை போட்டோஷாப்பினுள் சேர்த்துவிடுங்கள்.(பிளக்கின்ஸ்ஸை காப்பிசெய்து போட்டோஷாப்பின் மூல பைலை திறந்து அதில் உள்ள பிளக்கின்ஸ்-பில்டர் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்).இப்போது நீங்கள் வெள்ளம் வரவழைக்கும் போட்டோவினை திறந்துகொள்ளுங்கள்.
இப்போது பில்டர் -பிளம்மிங் பியர் - பிளட் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு தனியாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது இடதுபுறம் உங்களுக்கு தேவையான ஸ்லைடர் இருக்கும் தேவையா அளவினை நாம் நகர்த்த அதற்குஏற்ப உங்களுக்கு தண்ணீர் அளவு வேறுபடும்.
உங்களுக்கு ஸ்லைடரை நகர்த்துவதில் பிரச்சனை இருக்குமானால் நீங்கள் கீழே உள்ள விண்டோவில் உள்ள டைஸ் கிளிக் செய்யுங்கள். ஒவ்வொரு கிளிக்க்கும் உங்களுக்கு படம் மாறிகொண்டே இருக்கும்.
வெவ்வெறு புகைப்படங்களில் தண்ணீர் எப்படி வரவழைப்பது என நாம் பார்க்கலாம். இது திருச்செந்துரீல் எடுத்த புகைப்படம் கீழே-
இதே புகைப்படத்தில் தண்ணீர்வரவழைத்தால் வரும் புகைப்படம் கீழே-
குற்றாலத்தில் சாதாரணமாக உள்ள புகைப்படம் கீழே-
திடீரென வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும்.கீழே உள்ள புகைப்படம் பாருங்கள்-
குளத்தில் தண்ணீர் அதிகம் வந்ததால் வந்த படம் கீழே-
என்ன சுலபமாக இருக்கின்றதா? நீங்களும் விருப்பமான புகைப்படங்களில் தண்ணீர் வரவழையுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post