http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com பூட்டை திறக்க இனி சாவி தேவையில்லை: கைத்தொலைபேசி இருந்தால் போதும்

a

இந்த சாவியை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே" என்று சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தைபடுபவர்கள் பலர்.
வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விடயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் போன்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் கைத்தொலைபேசியின் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் கைத்தொலைபேசிகள் அறிமுகமாகி வருகின்றன.
எல்லாவற்றுக்கும் கைத்தொலைபேசியையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி என்றால் கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும்.
ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஓபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும்.
சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள் தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள் வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இணைய மற்றும் கன்வெர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும்.
ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள் ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் கைத்தொலைபேசி நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post