இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mkv பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.இதைப்போலவே ஏற்கனவே நாம் mp4 கட்டர் உபயோகிப்பது பற்றி முந்தைய பதிவினில் பார்த்தோம்.இரண்டும் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவையாகும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்