http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com நீங்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை இணையத்தில் பகிர்வதற்கு

a

பாடல்களை கேட்டு ரசிப்பது சுகமானது. பாடல்கள் பற்றி நண்பர்களோடு பேசி மகிழ்வது இன்னும் சுகமானது. இந்த இரண்டையும் சாத்தியம்மாக்குகிறது அவுட்லவுட் இணையதளம்.
இசை பிரியர்கள் எல்லோருக்குமே தங்களுக்கு பிடித்தமான பாடல்கள் பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் பிடித்தமானதாக இருக்கும். சில நேரங்களில் வானொலியிலோ செல்போனிலோ பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது நண்பர்கள் அருகே இருந்தால் அவர்களிடம் பாடலின் சிறப்புக்களை சொல்லி மகிழும் சூழல் அமையும்.
ஆனால் பல நேரங்களில் பாடல்களை கேட்கும் போது பக்கத்தில் நண்பர்கள் இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சில நேரங்களில் நண்பர்களுடன் மெய்மறந்து இசை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட பாடல்களை கேட்கும் வசதி இல்லாமல் போகலாம்.
இதற்கு மாறாக பாடல்களை நண்பர்களோடு சேர்ந்து கேட்டு ரசித்தபடி அவர்களோடு பாடல்களை விவாதிக்கும் வாய்ப்பை உண்டாக்கி தருகிறது அவுட்லவுட் இணைய தளம். அதாவது இணையத்தில் நாம் கேட்கும் அதே பாடலை நண்பர்களையும் கேட்கச்செய்ய்லாம்.அப்படியே அந்த பாடல்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் நண்பர்கள பாடலை கேட்டு ரசிக்க வசதியாக இந்த தளத்தில் உறுப்பினர்கள் தங்களுக்கான இணைய அறையை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு கைவசம் உள்ள பாடல்களை பதிவேற்றிவிட்டு நண்பகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களோடு சேர்ந்து பாடல்களை கேட்டு மகிழலாம். பாடலின் பிடித்த விஷயங்கள் குறித்து கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த உரையாடலின் போது பாடல்களை புதிய கோணத்தில் ரசிப்பது சாத்தியமாகலாம். நண்பர்கள் பரிந்துரைக்கும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்கலாம். முதல் முறையாக உறுப்பினராகிறவர்கள் புதிய அறையை அமைப்பதற்கு முன்பாக ஏறகனவே உருவாக்கப்பட்டுள்ள பொது அறையிலும் நுழைந்து பாடல்களை கேட்கலாம். இசை பிரியர்களுக்கு சுவாரஸ்யமான சேவை தான்.
இணையதள முகவரி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post