உலகில் எவ்வளவோ புரட்சிகள், புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்போது உலகிலேயே அதி விரைவு சூப்பர் கொம்ப்யூட்டர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இந்தப் புயல் வேக கொம்ப்யூட்டரில், வினாடிக்கு 10 ஆயிரம் கோடியை 1000த்தால் பெருக்கினால் எவ்வளவு எண்ணிக்கை வருமோ, அந்த எண்ணிக்கைக்கு புரோகிராம்களைச் செய்ய முடியும் என்று இதனைத் தயாரித்துள்ள விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
இந்த அதிநவீன கொம்ப்யூட்டருக்கு "ரோட் ரன்னர்' என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். உலகில் உள்ள இதர சூப்பர் கொம்ப்யூட்டர்களை விட, மூன்று மடங்கு அதி விரைவான சூப்பர் கொம்ப்யூட்டராக இருப்பது ஐ.பி.எம்.மின் ப்ளூ ஜெனி சூப்பர் கொம்ப்யூட்டர்தான். இதைவிட இரு மடங்கு அதிவிரைவாக செயற்படும் சூப்பர் கொம்ப் யூட்டர்தான் "ரோட் ரன்னர்'. அமெரிக்காவில், நியூ மெக்சிகோ நகரில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய ஆய்வுக்கூடத்தில்தான் இந்த சூப்பர் கொம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொம்ப் யூட்டரில் ஐ.பி.எம். நிறுவனத்திற்கும் பங்கு இருக்கிறது.
இந்த "ரோட் ரன்னர்' புயல்வேக சூப்பர் கொம்ப்யூட்டரில் ஐ.பி.எம்.மின் 13 ஆயிரம் கொம்ப்யூட்டர் சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த "ரோட் ரன்னர்' சூப்பர் கொம்ப் யூட்டர் பீடானபிளாப் கொம்ப்யூட்டர் வகையைச் சேர்ந்தது.
46 ஆண்டுகளுக்கு தினமும் 24 மணி நேரம் சாதாரண கொம்ப்யூட்டரில் 600 கோடி பேர் செய்யும் வேலையை இந்த ரோட் ரன்னர் ஒரு நாளில் செய்யுமாம். இதை நினைத்துப் பார்க்கவே நமக்கு தலை சுற்றுகிறது அல்லவா?
ஆமாம். இதுபோன்ற அதிவேக சூப்பர் கொம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உரு வாக்க 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
"பிளே ஸ்டேஷன் 3' என்ற பிரபல வீடியோ கேம்ஸ்சின் கொம்ப்யூட்டர் சிப்களையும் 12 ஆயிரத்து 960 செல் என்ஜின் களையும் பயன்படுத்தி இந்த ரோட் ரன்னர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 80 டெராபைட்ஸ் நினைவாற்றல் உள்ளது.
இதில் 6 ஆயி ரம் சதுர அடிக்கு இன்டர் கனக்டிங் சிஸ்டம் உள்ளது.
மேலும் 57 மைல் அளவுக்கு கண்ணாடி ஒளி கடத்திகள் இருக்கிறன.
இந்த ரோட் ரன்னர் சூப்பர் கொம்ப்யூட்டரின் எடை 5 லட்சம் பவுண்டு. இந்த சூப்பர் கொம்ப் யூட்டர் அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத் தப்பட உள்ளது.
என்றாலும் மருத்துவ, அறிவியல், பொறி யியல் போன்ற பல்வேறு துறைகளிலும் இதைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் இதை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்.
உயிரியல் எரிசக்தி கண்டுபிடிப்புக்கள், புதிய மருந்து கண்டுபிடிப்புகள், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான மருந்து கண்டு பிடிப்பு, உலக எரிசக்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பிரபஞ்ச ஆய்வுகள் போன்ற காரியங்களுக்காகவும் இந்த ரோட் ரன்னர் கொம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்.
இந்த கொம்ப்யூட்டர் நியூயோர்க் நகரில் உள்ள ஐ.பி.எம் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது பிறகு நியூ மெக்சிகோ நகரில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் தேசிய ஆய்வுக்கூடத்திற்கு எடுத் துச் செல்லப்படும்.
அதன் பிறகு பல சோதனைகளுக்கு உட் படுத்தப்பட்டு அதன் பிறகு அணு ஆயுத பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இதை அடுத்து முக்கிய அரசுப் பணி களிலும் இந்த உலகின் அதிவேக சூப்பர் கொம்ப்யூட்டர் படிப்படியாக பயன்படுத்தப் படும் என்று இதனை உருவாக்கியுள்ள விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எங்க நாட்டுக்கு எப்போ வருது...?
Tags
கணினி தவகல்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்