ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான்.
புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது.
இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உலகிலேயே மிகவும் பிரபலமான இமெயில் சேவை அளித்து வரும் கூகுல் அமெரிக்கர்கள் இலவசமாக வாழ்த்து அட்டையை தபாலில் அனுப்பி வைப்பதற்கான் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் இப்போது விடுமுரை கால மனோநிலையில் உள்ளது.வாழ்த்துக்கள் பரிமாரப்பட்டு வரும் இந்த காலத்தில் ஜிமெயில் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களில் யாரவது ஒருவருக்கு தபால் மூலம் வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்கலாம் என கூகுல் அழைப்பு விடுத்துள்ளது.பெயரையும் முகவரியையும் சமர்பித்தால் இலவசமாக இந்த அட்டையை கூகுல் அனுப்பி வைக்கும்.
இமெயில் சிறந்தது என்றாலும் தபாலில் வாழ்த்து அட்டையை பெறும் அனுபவத்திற்கு ஈடு இல்லை என்று குறிப்பிட்டுள்ள கூகுல் அந்த மகிழ்ச்சியை அளிப்பதற்காக இந்த வசதியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது.அதிலும் நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளாதவர்களிடம் இருந்து வாழத்து வருவது விஷேசமானது என கூகுல் தெரிவிக்கிறது.
வர்த்தக் நிறுவனமான கூகுல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் லாப நோக்கம் இல்லாமல் இல்லை. இந்த அட்டையிலும் குகுல் தனது சேவையை விளம்பரம் செய்து வருகிறது.ஆனாலும் கூட இந்த சேவை புதுமையானது என்பதில் சந்தேகமில்லை.எல்லோரும் மெல்ல தபால் சேவையை மறந்து வரும் நிலையில் கூகுல் தபால் மூலம் வாழ்த்து அனுப்ப வைத்து நட்பை புதுப்பித்துக்கொள்ள சந்தர்ப்பம் அளித்துள்ளது.
தீடிரென் வாழ்த்து அட்டை வரும் போது மகிழ்ச்சி ஏற்படுபவதோடு இமெயில்க்கு முந்தைய காலத்திற்கும் திரும்பிச்சென்று வரலாம் அல்லவா?
அதோடு இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதாக வைத்துக்கொள்வோம் .அப்போது கிராமத்தில் இருக்கும் தாத்தாவிற்கோ அல்லது சித்தப்பாவிற்கோ பொங்கல் வாழ்த்து அட்டையை தபாலில் அனுப்பி வைத்தால் அவர்கள் எப்படி மகிழ்வார்கள் என எண்ணிப்பாருங்கள்.
விளம்பரத்திற்காக என்றாலும் உண்மையிலேயே பயனுள்ள சேவையை அறிமுகம் செய்வது தான் கூகுலின் தனிச்சிறப்பு.
தை திங்களுக்கு கூகுல் இங்கேயும் இந்த சேவையை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
————
link;
https://services.google.com/fb/forms/gmailholidaycard/

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்