இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னபடுத்த வேண்டியிருக்கிறது. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிறது. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம். இமெயில் முகவரியை சமர்பிப்பதில் இன்னோரு பிரச்சனையும் இருக்கிறது.இமெயில் முகவரியை தருவது என்பது திறந்தவெளியில் பனத்தை வைப்பது போல தான்.அது களவாடப்படும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.இப்படி சமர்பிக்கப்படும் இமெயில்களை கொத்திச்செல்வதற்காக என்றே பாட்கள் என்று சொல்லப்படும் குட்டி ரோபோக்கள் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதன் பிறகு உங்களுக்கு அழையா மெயில்களை அனுப்பி வைக்கும்.உங்கள் முகவரி பெட்டியில் அடிக்கடு வந்து சேரும் எரிச்சலூட்டும் வியாபார ,விளம்பர மெயில்கள் வந்து சேருவது இப்படி தான். இந்த பிரச்சனைக்கு அழகான ஒரு தீர்வு இருக்கிறது.http://scr.iம்/ இணையதளம் அந்த தீர்வை வழங்குகிறது.இமெயில் கோரும் எந்த சேவையும் பயன்படுத்தும் முன் இந்த தளத்திற்கு சென்று உங்கள் இமெயிலை சமர்பிக்க வேண்டும்.உடனே அந்த முகவரியை யாரும் படிக்க முடியாத குறிச்சொற்களாக மாற்றிவிடும். இனி இமெயிலுக்கு பதிலாக இந்த குறிச்சொற்களை சமர்பிக்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இமெயில் பாதுகாப்பானதாக இருக்கும்.குறிச்சொற்கள் மூடிய இந்த இமெயிலை ரோபோக்கள் படிக்க முடியாது.அவற்றோடு கேட்கப்படும் ரகசிய கேள்விக்கு பதில் அளிக்கும் நபர்கள் மட்டுமே இதனை படிக்க முடியும். சூவர்ஸ்யமான சேவை;முயற்சித்து பார்க்கலாம்.
————
link;http://scr.im/
————
link;http://scr.im/
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்