http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com உங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்றுவதற்கு

a

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.
காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களையும் டிவிட்டர் வழியேவே பேஸ்புக் வழியேவே சுலபமாக பகிரலாம். ஆனால் அன்றாட நிகழ்வுகளை வார்த்தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்படலாம்.
எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண்டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இன்னும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள புதிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது.
மைக்ரோசோம் என்னும் அந்த சேவை தினசரி நட‌ப்புகளை அழகான வரைபட விவரங்களாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது. நாளிதழ் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளின் பொருளை விளக்கு அல்லது அதற்கு துணை நிறக வரைபடங்கள் வழியே விவரங்கள் கொடுக்கப்படுவது உண்டல்லவா?
அதே போல இணையவாசிகளும் தங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்களை வரைபடமாக பகிர்ந்து கொள்ள மைக்ரோசோம் வழி செய்கிறது.
உதாரணமாக ஒருவர் படித்த புத்தகம் பற்றி தகவல் தெரிவிக்க விரும்பினால் ஒரு வட்டத்தில் புத்தகத்தை படிக்க செலவிட்ட நேரத்தை தனி வண்னத்தில் சுட்டிக்காட்டலாம். அதே போல ஒரு நாள் செய்த வேலைகளை தனி தனியாக பிரித்து காட்டலாம்.
இன்பர்மேஷன் ஓவர்லோடு என்று சொல்வது போல எல்லாவற்றையும் வரிகளாக ப‌டித்து பார்ப்பதில் ஒருவித சுமையை உணர்ந்தால் இந்த தளம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இணையதள முகவரி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post