லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின் மீது அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம்.
சரி.லஷ்மண் ஸ்ருதியின் இணைய வீட்டிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?இல்லை என்றால் ஒரு முறை சென்று பாருங்கள்.அட என்று லேசாக வியந்து போவீர்கள்.அந்த அளவுக்கு அழகாகவும் செறிவாகவும் இருக்கிறது லஷ்மண் ஸ்ருதியின் இணையதளம்.
ஒரு இணையதளம் அழகாக இருப்பது பெரிய விஷயமல்ல.அதற்கு நல்ல வடைவமைப்பாளர் மட்டும் போதும்.ஆனால் இணையதளங்கள் சுவாரஸியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வடிவமைப்பு மட்டும் போதாது.விஷயம் இருக்க வேன்டும்.
லஷ்மண் ஸ்ருதி இணையதளத்தில் விஷயங்களுக்கு பஞ்சமில்லை என்பதே வியப்பான விஷயம்.உள்ளே நுழைந்தவுடனே முகப்பு பக்கத்தில் நம்மை வரவேற்பது இசை செய்திகள் தான்.இசை தட்டு வெளியீடு,இசை கலைஞசர்களுக்கு பாராட்டு,இசை விழா என இசைத்துறை தொடர்பான சமீபத்திய செய்திகள் பிராதானமாக இடம்பெறுவதே இந்த தளத்தின் பிராதான அம்சமாக இருக்கிறது.அநேகமாக தினந்தோறும் இசை செய்திகள் புத்தம் புதிதாக இடம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.
இது உண்மையிலேயே ஆச்சர்யமான சங்கதி.காரணம் ஒரு இசைக்குழுவின் இணையதளம் என்றதுமே அதன் சுயபுராணத்தையே எதிர்பார்க்கத்தோன்றும்.இசைகுழுவின் நிகழ்ச்சிகள், சாதனைகள் போன்ற விவரங்களே பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.சுருக்கமாகச்சொன்னால் இசைக்குழுவின் விளம்பர கையேட்டின் இணையவடிவமாகவே இணையதளம் இருக்கும்.அதன் காரணமாகவே வாசகர்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் ஏற்படாது.
ஆனால் லஷ்மண் ஸ்ருதியின் இணையதளத்தைப் பொருத்தவரை இசைக்குழு பற்றிஅய் விவரங்கள் பின்னணியில் இடம்பெற்றிருக்க இசை செய்திகளே நடு நாயகமாக அமைந்துள்ளன.
இசை செய்திகள் மட்டுமல்ல இடது பக்கத்தில் இசை விமர்சனங்கள்,வீடியோ,டாப் டென் பாடல்கள்,இசை புத்தகங்கள்,சிறப்பு பகுதி என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.இவற்றைத்தவிர பிரபலங்கள் பற்றிய குறிப்புகள்,திருக்குறள்,பிலிம்நியூஸ் ஆனந்தனின் திரைப்பட பட்டியல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இப்படி மேய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றனை.இசையமைப்பாளர்களின் பட்டியல்,பாட்ல் வரிகளின் பட்டியல் போன்றவற்ரை உதாரனமாக் கூறலாம்.சில பகுதிகளில் மிகக்குறைவான விவரங்களே இடம் பெற்றிருப்பது ஏமாற்றம் தரலாம்.ஆனால் இப்போது தான் உருவாக்கி கொண்டிருப்பதால் இருக்கலாம்.ஆனால் விரைவில் இவற்றை எல்லாம் முழுமையாக்க வேண்டும்.
மொத்ததில் உயிர்ரோட்டமாக உள்ள இனையதலம் என்று சொல்லலாம்.ஆனால் இந்த உயிரோட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள தவறிவிடக்கூடாது.
——
link;
http://www.lakshmansruthi.com/index.asp

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்