http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com சிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்

a


கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் அல்லது ஒரு சில செயல்பாடுகளுக்கென முடங்கிப் போனால் சிஸ்டத்தில் அதற்கு முன் பதிந்த புரோகிராம்களை அல்லது மேற்கொண்ட மாற்றங்களை எண்ணிப் பார்த்து அவை ஒவ்வொன்றும் காரணமாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்துச் செயல்படுங்கள் என்ற குறிப்பு முன்பு தரப்பட்டது.

சில வாசகர்கள் தாங்கள் உருவாக்கியா டாகுமெண்ட்கள் மற்றும் எக்ஸெல் ஒர்க் புக்குகளில் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து எழுதி இதனால் இருக்குமோ என்று கேட்டுள்ளனர். கிராஷ் ஆவதற்கான காரணங்கள் எனக் குறிப்பிட்டது சிஸ்டத்திற்கனா பைல்களைத்தான்.

அதாவது புதியதாக சிறிய ப்ளக் இன் புரோகிராம்களை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி இருக்கலாம். அல்லது இணையத்தில் உலா வருகையில் உங்களுடைய விண் ஆம்ப் புரோகிராமிற்கு புதிய ஸ்கின் ஒன்று வேண்டுமா? விண் ஆம்ப் நிறுவன தளத்தில் கிடைக்கிறது என்று செய்தி பார்த்து அது என்ன என்று யோசிக்காமல் அதனை கிளிக் செய்திருக்கலாம். ஆனால் அது உங்களை மாட்ட வைத்து வைரஸைப் பரப்பும் ஒரு வழி என்று பின்னர் தான் தெரிய வரும். இது போன்ற சிஸ்டம் சார்ந்த புரோகிராம்களைத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு சிஸ்டம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கையில் கம்ப்யூட் டர் தன் ரெஸ்டோர் புரோகிராமில் அதற்கான நாளைக் குறித்து வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் இன்ஸ்டால் செய்த குறிப்பிட்ட புரோகிராம் தான் அல்லது மாற்றம் அல்லது மேம்படுத்திய புரோகிராம் தான் என்று நீங்கள் எண்ணினால் அந்த நாளைக் குறித்துக் கொண்டு ரெஸ்டோர் வசதியைக் கையாளலாம். சிஸ்டம் ரெஸ்டோர் வசதியின் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை அந்த குறிப்பிட்ட நாளில் எப்படி இருந்ததோ அந்நிலைக்கு கொண்டு செல்லலாம். இன்ஸ்டால் செய்த அனைத்து புரோகிராம்களும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நீக்கப்படும். வைரஸ் ஏற்படுத்திய மாறுதல்களும் நீக்கப்படும். இதனால் கப்யூட்டர் பழைய நிலைக்கு வரும். ஆனால் இடைக்காலத்தில் நீங்கள் ஏற்படுத்திய டாகுமெண்ட்கள், பைல்கள், இமெயில் கடிதங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது.

சிஸ்டம் ரெஸ்டோர் கொண்டுவர Start, All Programs, Accessories, System Tools சென்று System Restore என்பதில் கிளிக் செய்திடவும். இதனைச் செயல்படுத்துமுன் இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் நிறுத்திவிட வேண்டும். ஆண்டி வைரஸ் புரோகிராம்களின் இயக்கத்தினையும் மூடிவிட வேண்டும். நீங்கள் தயாரானவுடன் “Restore my computer to an earlier time என்ற இடத்தில் கிளிக் செய்திட வும். பின் Next என்பதில் கிளிக் செய்க. இப்போது மாதக் காலண்டர் படம் கிடைக்கும். அதில் எந்த தேதிகளில் நீங்கள் மாற்றங்கள் மேற்கொண்டீர்களோ அவை எல்லாம் போல்டாக அழுத்தமான எண்ணுடன் காட்டப்படும்.

நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்த தேதியினைத் தேர்ந்தெடுத்து அதில் கிளிக் செய்திடவும். பின் ரெஸ்டோர் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படும். குறிப்பிட்ட நாளில் கம்ப்யூட்டர் எப்படி இருந்ததோ அந்நிலைக்கு கம்ப்யூட்டர் சென்று விடும். வைரஸ் பாதிப்பு இருந்தால் மட்டுமே ரெஸ்டோர் பயன்படுத்த வேண்டும் என்ப தில்லை. சில புரோகிராம்களை நாம் இன்ஸ் டால் செய்த பின்னர் அந்த மாற்றங்களினால் வேறு சில விளைவுகள் ஏற்படலாம். அல்லது அந்த புரோகிராமினைத் தொடர்ந்து பயன்படுத்த விலை கொடுக்க வேண்டி வரலாம். ஒருவர் தான் பயன்படுத்தி வந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றுக்கு அப்டேட் பைல் ஒன்றை விளம்பரம் மூலம் பெற்று அப்டேட் செய்தார்.

பின் அதனை இயக்குகையில் அந்த புரோகிராம் ஒரு வாரம் தான் இயங்கும் என்றும் அதன்பின் இணையதளம் சென்று பணம் கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு கிடைத்தது. உடனே பழைய நிலையே போதும் என்று முடிவு செய்த போது பழைய நிலைக்கான இன்ஸ்டலேஷன் பைல் கிடைக்கவில்லை. அப்போது இந்த ரெஸ்டோர் வசதியைப் பயன்படுத்த பழைய நிலைக்குச் சென்றார். விண்டோஸ் எக்ஸ்பி இவ்வாறு புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் தானாக ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை ஏற்படுத்திக் கொள்கிறது. இருப்பினும் நாமாக இது போன்ற புதிய மாற்றங்களை ஏற்படுத்துகையில் ரெஸ்டோர் பாய்ண்ட்டு களை ஏற்படுத்துவதும் நல்லது.

இதற்கு ரெஸ்டோர் விண்டோவில் முதல் ஸ்கிரீனில் “Create a Restore Point” என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் Next என்பதில் கிளிக் செய்து அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு ஒரு பெயர் கொடுத்து அதன்பின் Create என்பதில் கிளிக் செய்து முடிக்கலாம். அந்த புதிய பாய்ண்ட் அன்றைய தேதி மற்றும் நேரத்துடன் அமைக்கப்படும். ரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்த எளிது. சிஸ்டத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறதே என்று தயங்க வேண்டாம். கம்ப்யூட்டரில் ஏற்படும் பல தேவையற்ற மாற்றங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் நல்ல வசதி இது. எனவே இதனை தயக்கமின்றிப் பயன்படுத்துங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post