http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஓட்ஸ், பாதாம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்: ஆய்வில் தகவல்

a

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால் பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர்.
அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை.
முறையான அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.
ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர்.
இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post