http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com இ மெயிலில் கால் செய்யவும்

a

இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்து போன் செய்ய முடியுமா? முடியும்! இந்த மாயத்தை சாத்தியமாக்கும் சேவையின் பெயர் “யூம்பா’ இஸ்ரேலைச் சேர்ந்த இலாத் ஹெமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த சேவையை உருவாக்கி இருக்கிறார். ஓராண்டு கால உழைப்பிற்கு பின் சமீபத்தில் இந்த சேவை இணையவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யூம்பா’ சேவையை பயன்படுத்து பவர்கள் தங்கள் இமெயிலில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பேச முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் இமெயில் முகவரியும் இன்டெர் நெட்டில் இணைக்கப்பட்ட தொலை பேசியிலும்தான். மறு முனையில் இருப்பவர் அருகாமையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்!
அதோடு அவருக்கு என ஒரு இமெயில் முகவரி இருந்தால் போதும்! அவர் யூம்பா உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ பூம்பா சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை இதுதான் பூம்பாவின் தனிச்சிறப்பு. யூம்பா சேவை பிறந்ததற்கான காரணமும் இதுதான்!
“ஸ்கைப்’ போன்ற சேவைகளின் மூலம் இன்டெர்நெட் வழியே போன் பேசலாம். ஆனால் அதற்கு மறு முனையில் இருப்பவர் ஸ்கைப் உறுப்பினராக இருக்க வேண்டும்! அதேபோல், கூகுல் (அ) யாஹூ சேவையை பயன்படுத்துவதாயின் தொடர்புகொள்ள விரும்புபவரும், கூகுல் (அ) யாஹூ உறுப்பினராக இருந்தாக வேண்டும்.
ஆக, உங்கள் நண்பர்களுடன் எல்லாம் பேச வேண்டும் என்றால் ஒன்று நண்பர்களை நீங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மாறச் சொல்ல வேண்டும் இது அத்தனை சாத்தியமல்ல. எனவே உங்கள் நண்பர் வைத்திருக்கும் சேவையில் நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இப்படியாக பத்து (அ) இருபது நண்பர்களுடன் பேசுவதற்காக நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் உறுப்பினராகி தனித்தனி முகவரி கணக்கை பராமரித்து வர வேண்டும்.
இதில் உள்ள சங்கடம் நான்கைந்து இன்டெர்நெட் தொலைபேசி சேவையை பயன்படுத்துபவருக்கு நன்றாக புரியும். யாஹூ நண்பருக்கு போன் செய்ய வேண்டும் என்றால், யாஹூ முகவரி கணக்கில் இருந்து தொலைபேசி செய்ய வேண்டும்.
ஸ்கைப் நண்பர் என்றால் ஸ்கைப்பில் இருந்து அழைக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் எந்த சேவையில் உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிலிருந்தே யாருடனும் பேச முடிந்தால் நன்றாகத்தானே இருக்கும்! யாஹூ போன்ற வலைவாசகல்கள் தங்கள் பயனீட்டாளர்கள் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இப்படி எந்த சேவையை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அனுமதிப்பதில்லை.
எல்லா நிறுவனங்களுமே தங்கள் சேவைக்கு அதிக உறுப்பினர்கள் சேர வேண்டும் என்று நினைப்பது இயல்பானதுதான்! ஆனால் பிரச்சனை இணையவாசிகளுக்கு தான். ஒரு குறிப்பிட்ட சேவை வட்டத்துக்குள் வராத அந்நியர்களிடம் பேச வேண்டும் என்றால் நாமும் சேவை மாறியாக வேண்டும்.
இந்த நிலைக்கு தீர்வாகத்தான் யூம்பா வந்திருக்கிறது. யூம்பாவில் இருந்து யாருக்கு வேண்டுமானால் போன் செய்யலாம். அதோடு இந்த சேவையை பயன்படுத்துவதும் ரொம்ப சுலபமானது. எல்லாமே வெறும் கிளிக் தான். யூம்பா சாப்ட்வேரை டவுன்லோடு செய்ததுமே அது ஏற்கனவே நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு இமெயில் முகவரி பெட்டியை திறந்தால் அதில் உள்ள நண்பர்களின் முகவரிக்கு அருகே தொலைபேசி லோகோவும் இடம் பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால் போதும் பேச தொடங்கி விடலாம். நண்பர் மறுமுனையில் இல்லை என்றால் வாய்ஸ் மெயில் மூலம் செய்தியை பதிவு செய்யலாம்.
தொலைபேசி அழைப்பு மட்டும் அல்ல இதே முறையின் மெசேஜிங் சேவை மூலம் செய்தியும் அனுப்பி வைக்கலாம். இன்டெர்நெட் விஷயத்தில் மேம்பாடு தேவைப்பட்டாலோ ஏதாவது ஒரு குறை இருப்பதாக உணர்ந்தாலோ அதற்கான தீர்வை நாமே உருவாக்கி கொள்ளலாம் என்னும் உணர்வுக்கு ஏற்ப இஸ்ரேலின் ஹெமார் இந்த சேவையை தனக்காகவும் சக இணையவாசிகளுக்காகவும் உருவாக்கி உள்ளார்.
இன்டெர்நெட் தொலைபேசியை பயன்படுத்த முற்படுகையில் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக அந்த சேவையை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
இந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து முழு வீச்சில் சேவையாக உருவாக்கி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாட்டில் அறிமுகமான இந்த சேவையை இன்று இந்தியா உட்பட 55 நாடுகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
——————
link;
www.yoomba.com

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post