விதவிதமான வீடியோ -ஸ்கிரீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிரீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள்- சுப்ரபாதம்-கந்தசஷ்டி கவசம் என நமது கம்யூட்டர் ஒய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒளித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு உதவி புரிகின்றது.இந்த சாப்ட்வேரில பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf பைலாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற சாப்ட்வேர் வேண்டும். இந்த சாப்ட்வேரினை பற்றி நான் ஏற்கனவே கம்யூட்டரின் அஞ்சரைப்பெட்டி என்கின்ற தலைப்பில் விரிவாக பதிவிட்டுள்ளேன். அதனை காண இங்கு கிளிக் செய்யவும்.இப்போழுத உங்களிடம் உள்ள வீடியோ பைலை இந்த சாப்ட்வேர் மூலம் .SWF பைலாக மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற சாப்ட்வேர் தேவை.5 எம்.பி்.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Add Files மூலம் தேவையான வீடியோ பைலை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள்.உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக்கொள்ளலாம். இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவு்ம். சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இந்த ஸ்கிரீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.இப்போது டெக்ஸ்டாப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில ஸ்கிரீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான .நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிரீன்சேவராக ஓட ஆரமபிக்கும். இதனுடைய மூல பைலை நீங்கள் விரும்பிய நபருக்கு கொடுங்கலாம். சற்று குழம்புவது மாதிரி இருந்தாலும் பெர்றுமையாக செய்தீர்களேயானால் அருமையாக வரும்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்