மருத்துவமனை சென்றால் முதலில் சோதிப்பது நமது பி.பி.தான்.பி.பி.அதிகம் என்றாலும் அவஸ்தைதான் - பி.பி.குறைவு என்றாலும் வேதனைதான்.நார்மல் என்றால் மனம் நிம்மதி அடையும். ஆனால் கம்யூட்டரில் பார்க்கப்படும் பி.பி.அளவு அதிகம் என்றால் மனம் மகிழ்ச்சி அடையும்.என்ன குழப்பமாக உள்ளதா..? நமது இணைய இணைப்பின் -பிராட்பாண்ட்-வேகத்தை அளவிட பல தளங்கள் இருந்தாலும் இது சுலபமாகவும் அருமையாகவும் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Begin கிளிக் செய்யவும்.
இதில் உள்ள மீட்டர் இணைய வேகத்திற்கு ஏற்ப சுற்றும்.இறுதியாக டவுண்லோடு ஸ்பீடு நமக்கு கிடைக்கும்.
மீண்டும் மீட்டர் சுற்றி அப்லோடு ஸ்பீடு கிடைக்கும்.
பழைய அளவினையும் புது அளவினையும் நாம் கிராப் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்