முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போதும் - நீரோவில் சி.டி.காப்பிசெய்யும்போதோ அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல்வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்.
அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்.
மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்