ஸ்கிரின்சேவரில் விதவிதமான படங்கள் - வீடியோக்கள் பார்த்தோம். ஆனால் கருத்துள்ள பொன்மொழிகள்.நகைச்சுவைகள்-பயனுள்ள தகவல்களை ஸ்கிரீன் சேவராக வரவழைக்க முடியுமா? இந்த சாப்ட்வேரின் துணைகொண்டு நாம் வரவழைக்க முடியும். 1 எம்.பி. கொள்ளளவை விட குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து பின்னர் உங்கள் மவுஸை ரைட் கிளிக் செய்து Properties பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Screen Saver தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் MomSoft Jokes தேர்வு செய்து ப்ரிவியு கொடுக்கவும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏற்கனவே அவர்கள் கொடுத்துள்ள நகைச்சுவைகள் - தத்துவங்கள் நமக்கு ஸ்கிரின் சேவரில் கிடைக்கும். அவர்கள் என்ன தருவது? நாமே நமக்கு பிடித்த நகைச்சுவைகள் - தத்துவங்கள் - பொன்மொழிகளை அமைக்கலாம் வாங்க. அதற்கு நீங்கள் சி-டிரைவில் உள்ள ப்ரோகிராம் தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் mom soft தேர்வு செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நான்கு நோட்பேட் பைல்கள் இருக்கும். அதனை ஓவ்வொன்றாக கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் Startக்கும் End க்கும் நடுவில் நமது பொன்மொழிகள் - நகைச்சுவைகள் - தத்துவங்களை தட்டச்சு செய்துகொள்ளவேண்டியதுதான். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Start
The Airplane Law:
When the plane you are on is late, the plane you want to transfer to is on time.
End
இந்த வாக்கியம் ஸ்கிரீன் சேவரில் கீழ்கண்ட வாறு வரும்.
அவ்வளவுதாங்க. அப்புறம் என்ன - வேண்டிய வார்த்தைகளை -தத்துவங்களை - நகைச்சுவைகளை - பொன்மொழிகளை எழுதி மற்றவர்களை அசத்துங்கள்.தமிழ்பற்று இருப்பவர்கள் திருக்குறளை இதுபோல் வரவழைக்கலாம்.
பதிவினை பாருங்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்