24 மணிநேரமும் இணைய இணைப்பு இலவசம் என்றில்லாமல் இரவு 2 மணி முதல் காலை 8 மணிவரை இலவச பதிவிறக்கம் அனுபவிப்பவர்கள் ஏராளம். அதிகாலை 2.15 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கம்யூட்டரை ஆன்செய்துவிட்டு மீண்டும் உறக்கத்தை தொடருவார்கள். காலை 7.45 க்கு இணைய இணைப்பை துண்டித்துவிடுவார்கள். எப்பொழுதாவது என்றால் சரி..தினசரி அவ்வாறு எழுந்து டவுண்லோடிங் போட்டுவிட்டு படுப்பது என்றால் சிரமம். அதுபோல்வெளியில் எங்காவது சென்றாலும் - இரவு பணிக்கு சென்றலாலும் டவுண்லோடு செய்வது கடினமே. அந்த கடினமான பணியை சுலபமாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் படி நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதிகாலை 2 மணியிலிருந்து இலவசம் என்றாலும் நாம் 2.15 மணியை செட் செய்வதே நமக்கு பயன்தரும்.அதுபோல் காலை 8 மணிவரை இலவச நேரம் இருந்தாலும் 15 நிமிடம் முன்னரே முடித்துவிடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை பற்றி நண்பர் பதிவிட்டுள்ளார். அவர்பிளாக்கில் பதிவிட்டுள்ள பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.விரிவான விளக்கம் கொடுத்துள்ளதால் மேலும் நான் விளக்கவில்லை...இந்த சாப்ட்வேர் முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.
பயன்படுத்திப்பாருங்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்