டுவிட்டர் இணையதளம் மூலமாக நம்முடைய தகவல்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
சமூக இணையதளங்கில் டுவிட்டர் ஒரு முக்கியமான தளம் ஆகும். வெளிப்படையாக சொல்ல முடியாத பல்வேறு செய்திகளை டுவிட்டர் தளத்தின் வாயிலாக சொல்ல முடியும்.
உதாரணமாக பிரபலமான நடிகர்கள் மிக முக்கியமான செய்திகளை நேரடியாக சொல்ல மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற சமூக இணையதளங்களில் எந்தவித தயக்கமும் இன்றி வெளியிடுவார்கள்.
இதனால் அதிகமாக குழப்பங்களே எழுந்துள்ளது. அந்த வகையில் டுவிட்டர் தளத்தில் இது வரை நாம் வெறும் செய்திகளை மட்டுமே நண்பர்களுடன் பகிர்ந்து வந்தோம். ஆனால் தற்போது செய்திகளுடன் சேர்த்து படங்களையும் வெளியிட முடியும். இந்த வசதி தற்போது டுவிட்டரில் இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வழக்கம்போல உங்களுடைய கணக்கில் உள்நுழையவும், பின் Tweet பகுதிக்கு சென்று உங்களுடைய செய்தியினை தட்டச்சு செய்து பின் இமேஜ் இணைப்பதற்கான ஐகானை அழுத்தவும்.
ஐகானை அழுத்தியவுடன் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உங்கள் கணணியில் உள்ள படத்தினை தேர்வு செய்யவும். இந்த வசதியின் மூலம் செய்திகேற்ப சரியான விளக்கபடமும் அளிக்க முடியும்.
வேண்டுமெனில் இந்த படங்களை நீக்கம் செய்து கொள்ளவும் முடியும். குறிப்பிட்ட பதிவினை தேர்வு செய்து பின் படத்தை தேர்வு செய்யவும். பின் படத்தின் அடியில் தோன்றும் Delete என்னும் பொத்தானை அழுத்தி நீக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்