சம்சாரம் வெளியே போனால் தோராயமாக எப்போது வருவார்கள் என சொல்லலாம். ஆனால் மின்சாரம் போனால் எப்போது வரும் என்றே சொல்ல் முடியாது. இன்றைய கால கட்டத்தில் எப்போதுவேண்டுமானாலும் செல்லலாம்.முக்கியமான கடிதம் -போட்டோ-கணக்கு என்று பிஸியாக கம்யூட்டரில் வேலை செய்துகொண்டு இருப்போம். கடைசி நேரத்தில் கரக்டாக கரண்ட் கட்டாகும். அதே நேரத்தில் நம்மிடம் உள்ள யுபிஎஸ்-ஸீம் சார்ஜ் நிக்காமல் ரீ-ஸ்டார்ட ஆகும். எல்லா நேரமும் நாம் அப்ளிகேஷன்களில் ஆட்டோ சேவ் செட் செய்திட மறந்துவிடுவோம்.இனி கவலைகள் வேண்டாம். இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்துவிட்டால் போதும். தானே சேமிக்கும் வேலையை 70 கே.பி. அள்வுள்ள இந்த சாப்ட்வேர் செய்துவிடும்.இதனை பதிவிறக்க் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 15 செகண்ட்டிலிருந்து 10 நிமிடம் வரை உள்ள எந்த கால கட்டத்தில் நீங்கள் படைப்புகளை சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த கட்டத்தை கிளிக் செய்து Hide கிளிக் செய்துவிடுங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்