இணையத்திற்கு சென்றால் எதாவது ஒரு வகையில் நாம் கூகுளின் உதவியை நாடி சென்றே ஆக வேண்டும்.
அந்த வகையில் கூகுளின் வசதிகள் இணைய உலகில் பெருகி உள்ளன. இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் பலவும் விலைக்கொடுத்து மட்டுமே பெற வேண்டும்.
ஒரு சில மட்டுமே இலவசமாக கிடைக்கும். ஆனால் கூகுள் புத்தகங்களை நாம் இலவசமாகவே பெற முடியும். ஆனால் இந்த புத்தகங்களை நம்மால் ஓன்லைனில் இருந்தவாறு மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த புத்தகங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வசதி ஏதும் இருக்காது. இதனால் கால விரயமும், பணச்செலவு மட்டுமே ஆகும். இவ்வாறு இலவசமாக கிடைக்கும் கூகுள் புத்தகத்தினை நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
ஆனால் இதனை தவிர்க்கவும் ஒரு வழி உள்ளது. கூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது. நீட்சியினை உலவியில் நிறுவுவதற்கு முன் இந்த Greasemonkey நீட்யினை உங்கள் உலவியில் நிறுவிக்கொள்ளவும். பின் Google Book Downloader நீட்சியினை உங்கள் கணணியில் நிறுவவும்.
Greasemonkey
பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Google Book Downloader நீட்சியினை உங்களுடைய உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒரு முறை உங்களுடைய நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது கூகுள் புத்தகத்தை நெருப்புநரி உலவியில் ஒப்பன் செய்யவும்.
தற்போது இந்த பக்கத்தில் Download this book என்னும் சுட்டி இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்திற்கு தனித்தனி பதிவிறக்க சுட்டி இணைக்கப்பட்டிருக்கும், வேண்டுமெனில் அதை பயன்படுத்தியும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதில் என்ன குறைபாடு என்றால் பதிவிறக்கம் செய்த பின்பும் நாம் தனித்தனியாகவே சேமிக்க வேண்டும். மொத்தமாக சேமிக்க முடியாது. எனினும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். சற்று நேரம் செலவாகும்.
Google Book Downloader

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்