http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

a

கணணியின் வேகம் என்று கூறும் போது அதில் வன்பொருள், மென்பொருள் இரண்டுமே சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் கணணி மிக வேகமாக செயல்படும்.
512 MB Ram எனும் போது Windows XP சிறப்பாக இயங்கும். அதற்கு கூடிய OS பாவித்தால் கணணியின் வேகம் பாதிக்கப்படும் மற்றும் கணணியை ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.


அதாவது கணணியை நாம் பாவிக்கும் போது நமது வன்தட்டில் உள்ள ஒவ்வொரு தகவலும் இடம்மாறி குளம்பி காணப்படும். எனவே இதனை சரி செய்வதற்கென Windows Xp உடன் Disk Defregment, Disk Check என Utility கள் வருகின்றன.
இதனை பயன்படுத்தி துப்பரவு செய்தால் கணணி சற்று வேகமாக இயங்கும். இதனை பயன்படுத்த Start ==> All Programs ==> Accessories ==> System Tools ==> Disk Defregment என காணப்படும் அதனை Click செய்து வேண்டிய Drive ஐ சுத்தப்படுத்தலாம்.
மற்றும் Disk Check செய்ய குறித்த Drive ஐ Right Click செய்து Properties என்பதை Click செய்து பின் அதில் மேல் காணப்படும் Tab ல் Tools என்பதில் பார்த்தால் Error Checking என காணப்படுவதில் மேற்கொள்ளலாம். அதன் கீழ் Disk Defregment உம் காணப்படும். அவ்வாறு செய்தும் கணணி வேகம் போதாது என்றால் உங்கள் Registry ல் பல குப்பைகள் காணப்படலாம்.
அதன் காரணமாக உங்கள் கணணியின் வேகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதாவது நீங்கள் ஒரு மென்பொருளை கணணியில் நிறுவி பின்னர் அதனை நீக்கும் போது அவ் மென்பொருள் முழுவதும் நீங்குவது இல்லை அது சில Registry File களை விட்டுச் செல்லும் அதனை முழுவதும் நீக்க பல மென்பொருள்கள் வருகின்றன அதில் பிரபல்யமானது Uniblue RegistryBooster 2011 எனப்படும் மென்பொருள் ஆகும். அதனை பயன்படுத்தினால் சற்று வேகம் அதிகரிக்கும்.
கணணியின் வன்பொருளை அதிகரிப்பதன் மூலமும் வேகத்தை அதிகரிக்க இயலும். ஆயினும் கணணியின் வேகமானது Ram ல் மாத்திரமே தங்கியுள்ளது என பலர் நினைப்பர்.
ஆனால் கணணியின் வேகமானது அனைத்து வன்பொருளிலும் தங்கியுள்ளது. அதாவது Ram ன் அளவு, Mother Board ன் data Transfer Speed(FSB -Front Side Bus), மற்றும் Processor ன் வேகம் மற்றும் Processor ன் Cash Memory. இவை அனைத்திலும் கணணியின் வேகம் தங்கியிருப்பதால் வெறுமனே Ram ன் அளவை மாத்திரம் அதிகரிப்பதால் கணணியின் வேகம் அதிகரிக்காது.
எனினும் அனைத்து வன்பொருட்களையும் மாற்ற அதிக செலவாகும் என்பதால் அனைத்தையும் மாற்றாமல் Ram ஐ மாத்திரம் மாற்றி சற்று அதிகரிக்கச் செய்யலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post