http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஃபேஸ்புக்கும் நிறுவனத்தின் புதிய மொபைல் அப்ளிகேசன். [இலங்கையில் டயலொக்]

a

சமூக வலைத்தளங்களின் ராஜாவான ஃபேஸ்புக் இணைய தளம் இன்று புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் ஸ்மார்ட் போன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த ஃபேஸ்புக்கானது தற்போது சாதாரண மொபைல் பக்கமும் திரும்பியுள்ளது.


இந்த புதிய அப்ளிகேசன் மூலம் ஃபேஸ்புக் இணைய தளத்தை இலகுவாக வலம்வர முடியும். குறிப்பாக Profile, Newsfeeds, Friend list, Photo என்பவற்றை இலகுவாகவும் தெளிவாகவும் உங்கள் மொபைல் தொலைபேசியில் பாவிக்கக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக சில கையடக்க தொலைபேசி வழங்குனர்கள் இந்த சேவையினை எந்தவித கட்டணமும் இல்லாமல்(GPRS கட்டணம்) இலவசமாக முதல் 90 நாட்களுக்கு வழங்குவார்கள் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வழங்குனர்களின் பட்டியல் பின்வருமாறு,
இலவச சேவையினை இன்று முதல் வழங்கும் நிறுவனங்கள்
  • Dialog (Sri Lanka)
  • Life (Ukraine)
  • Play (Poland)
  • StarHub (Singapore)
  • STC (Saudi Arabia)
  • Three (Hong Kong)
  • Tunisiana (Tunisia)
  • Viva (Dominican Republic)
  • Vodafone (Romania)
மிக விரைவில் கீழ்வரும் வழங்குனர்கள் இந்த இலவசச் சேவையினை வழங்குவார்கள்
  • Mobilicity (Canada)
  • Reliance (India)
  • Telcel (Mexico)
  • TIM (Brazil)
  • Vivacom (Bulgaria
இந்த புதிய அப்ளிகேசனானது Snaptu நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் 2500 வகைக்கும் மேலான கையடக்க தொலைபேசிகள் பாவிக்ககூடியதாகவும் இருக்கும் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறிப்பாக Nokia, Sony Ericsson, LG போன்ற பிரதான கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
fb appஇந்த புதிய அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய இந்த m.fb.snaptu.com/f முகவரிக்கு உங்கள் கையட்டக்க தொலைபேசியினூடாக சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த புதிய அப்ளிகேசன் தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post