http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்

a

சிறுநீரகங்களை உயர் அழுத்த அலைகள் மூலம் தூண்டி மாரடைப்புக்கு சிகிச்சையளிக்கும் புதிய முறையை கண்டுபிடித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் டாரெல் பிரான்சிஸ் தலைமையில் இதயநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களும், சிறுநீரக பாதிப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் இதயம், சிறுநீரகம் ஆகிய இரண்டும் அல்லது ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் இரண்டுக்கும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம் என்கின்றனர்.
புதிய சிகிச்சை முறை குறித்து டாரெல் கூறியதாவது: இதயம், சிறுநீரகம் இடையே உள்ள நரம்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இரண்டு உறுப்புகளின் பாதிப்புகளை சீராக்குவதே புதிய சிகிச்சையின் முக்கிய நோக்கம்.
சிறுநீரகங்களில் இருந்து நரம்புகள் மூலம் அனுப்பப்படும் உயர் அழுத்த சமிக்ஞைகள் முதலில் மூளையை அடைகிறது. அங்கிருந்து இதயத்துக்கு அனுப்பப்படுகிறது.
ஏதேனும் ஒரு உறுப்பில் இருந்து மூளைக்கு, எமர்ஜென்ஸி மோடில் அனுப்பப்படும் இந்த மின் அழுத்த சமிக்ஞைகள் மற்ற உறுப்பின் பாதிப்புகளை சீர்செய்கின்றன. இந்த புதிய சிகிச்சையால் இதயத்துடிப்பு சீராவதுடன் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். சுவாச கோளாறுகளான மூச்சு வாங்குதல், சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளும் குணமாகும்.
விலங்குகளில் சோதனை நடத்தியதில் இந்த சிகிச்சைக்கு வெற்றி கிடைத்தது. தொடர்ந்து மனிதர்களிடமும் சோதித்து பார்க்கப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால் இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post