http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com விண்டோசின் ஓன்லைன் டிரைவ் அறிமுகம்

a

என்ன தான் வன்தட்டின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும் நாம் அதில் பதியும் கோப்புகளின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
சில நெருக்கடியான வேளைகளில் எந்த கோப்பை அழிப்பது, எந்த கோப்பை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம்.
இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஓன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய கோப்புக்களை சேமித்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள கோப்புக்களை பதிவேற்றம் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஓன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பது தான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்(Windows Live Sky Drive) வசதியாகும்.
இந்த ட்ரைவில் கோப்புக்களை சேமித்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேமித்து வைக்கலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 பொட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு உண்டு.
அத்துடன் இந்த கோப்புக்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு(Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக்(Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் உங்களுக்கென்று கணக்கு ஒன்றைத் தொடங்கி கொள்ளுங்கள்.
பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று கோப்புக்களை பதிவேற்றம் செய்திடலாம். உங்கள் கோப்புக்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கணணியில் உள்ள மற்ற வன்தட்டு ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய கோப்புக்களை உங்கள் கணணியில் வைக்காமல் ஓன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post