கோப்புகளின் அளவை குறைக்க வேண்டுமெனில் நாம் அந்த குறிப்பிட்ட கோப்பினை
ஜிப் அல்லது ரேர் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். ஆனால் பிடிஎப்
கோப்பின் அளவை அதனுடைய பார்மெட்டிலேயே வைத்து மாற்ற முடியும். இதனை நாம்
இலவச மென்பொருள் கொண்டும் செய்ய முடியும். இல்லையெனில் இணையத்தின்
உதவியுடன் ஆன்லைனிலேயே செய்யலாம்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு
பின் Download பொத்த்டானை அழுத்தவும். பின் மென்பொருளை பதிவிறக்கி
கணினியில் நிறுவவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு குறிப்பிட்ட
அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த பிடிஎப் கோப்பின் அளவை குறைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
பின் கன்வெர்ட் செய்த பிடிஎப் கோப்பினை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும்
குறிபிட்டு விட்டு பின் Start batch என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது
நேரத்தில் பிடிஎப் கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.
பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யும் போது அதனை நம்முடைய விருப்ப தேர்வு மூலமாக
மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்
ஆகும்.
ஆன்லைன் மூலமாக பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்ய
PDFaid தளத்தில் இலவசமாகவே பிடிஎப் கோப்புகளின் அளவை குறைக்க முடியும்.
இந்த தளத்திற்கு சென்று பிடிஎப் பைலை தேர்வு செய்து பின் விருப்ப தேர்வுகளை
STEP 2 வில் அமைத்துக்கொண்டு
பின் Compress Pdf என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் பைல்
கன்வெர்ட் செய்யப்பட்டு அதை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும்.
மேலும் இந்த தளத்தில் 20எம்.பி அளவுக்கு மேல் உள்ள பைல்களை கன்வெர்ட் செய்ய
இயலாது.
தளத்திற்கான சுட்டி
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்