http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com உலக அழிவு

a

அநேகமான இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும்
 தொலைக்காட்சிகளிலும் தற்போது உலாவரும் பொதுவானவிடயம் உலக
அழிவை பற்றியது இப்பிரச்சனையை சற்று பூதாகரமாக கிளப்பி விட்டது
2012என்ற திரைப்படம் என்றே கூறலாம் இத்திரைப்படத்தில் உலக
 அழிவுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது 
  மாயன்காலேண்டேரின் முடிவு என்று கூறப்பட்டது


 .........     இத்திரைப்படத்தின்பின்னர்தான் மாயன் இனத்தவர்கள் பற்றிய
பல விடயங்கள் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளன...இதனால் உலக
அழிவைப்பற்றிய தலைப்புக்களில்  மாயனினத்தவர்கள்
 தவிர்க்கமுடியதவர்கள்ஆகிவிட்டார்கள் மாயன்  இனத்தவர்களின்  விடயம்
 ஒரு புறமிருக்க விஞ்ஞானிகளும் தமது பங்கிற்குஉலக அழிவு
 நடைபெறுவதற்கான  காரணங்களை கூறிவருகின்றார்கள் ..சூரியப்புயல்
,சூப்பர் வோல்கோனோ,அணு மோதல் பரிசோதனை ,பூமியின் வடதென்
 காந்தமுனைகள்  இடம் மாறுதல் சூரியனின் ஈர்ப்புமையம் சற்று இடம்
 மாறுதல் கலக்டிக் அளிஞ்மென்ட் என பல காரணங்கள் கூறிவருகின்றனர்
அடுத்து நமது சமய வல்லுனர்களும் இது பற்றிய கருத்துக்களை சமய
ரீதியாக வெளியிட்டுள்ளார்கள் ...உதாரணமாக அர்மகோடேன் ,ஜீசசின்


இரண்டாவது வருகை  போன்றவை அவை , அத்துடன் தீர்க்கதரிசிகளின்
 தீர்க்கதரிசனங்களும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன ...மிக முக்கிய
 தீர்க்கதரிசியாக காணப்படுபவர் நோஸ்ராடாமஸ்.பைபிளுக்கு அடுத்தபடியாக
 உலகில் பிரபலமாக காணப்படுவது இவர் எழுதிய தி சென்டுரீஸ் என்ற
 நூல் .அதில் குறிப்புக்களாக எதிர்வுகூறல்களை கூறியுள்ளார் உலகின்
 முக்கிய விடயங்கள் முக்கிய தலைவர்கள் எனப் பல (த்விண்டோவேர்
 உடைந்தது)விடயங்களை கூறி உள்ளார்  )இவரைப்பற்ற தனிஆய்வு 
கட்டுரை  எழுதும் அளவுக்கு பல விடயங்கள் உள்ளன இவரும் உலக
அழிவை பற்றி கூறியுள்ளார் ..இப்படி காரணங்கள் தொடர்கின்றன இவற்றை
 எல்லாம் முடிந்த அளவில் அலசுவதே இக்கட்டுரையின்   நோக்கம்
 ..
]].இப்பவே கண்ணைக்கட்டினாலும் தொடர்ந்து வாசியுங்கள்
 .இந்த உலக அழிவைப்பற்றிய எச்சரிக்கைகள் இன்று நேற்று
 தொடங்கியதல்ல ....1500 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து
 வருகின்றது  என்றால் நம்ப முடிகிறதா ?...இதுவரை இப்படி 242 முறை
 கூறி உள்ளார்கள்...ஆனால் எதுவும் இதுவரை பாரிய
விளைவுகளைக்குடுக்கொடுக்கவில்லை  ....ஆனால் இப்படி வெளியிடும்
 தகவல்களை நம்பி பலர் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது
கவலைக்குரிய விடயம் ..கி.பி 44 -கி.பி 2012வரை 242 உலக
 அழிவைப்பற்றிய வெளியிடல்கள் உள்ளன      ஆனால் இது இத்துடன்
 நிற்கவில்லை2015,2037,2042 என்று தொடர்கிறது ...

சரி ஒவ்வொன்றாக நோக்குவோம் முதலில் மாயன் கலண்டர்...
இது மத்திய அமெரிக்க நாகரீகம் கி.மு2600  இல்    மாயன் நாகரீகம்
 தோன்றியது இவர்கள் மெக்ஸிகோ,குஅட்டேமலா,ஹோண்டுராஸ்   
  போன்ற பகுதிகளில் காணப்படுகின்றார்கள் ..கொலப்பஷுக்கு முந்திய
 காலத்திலேயே அமெரிக்காவில் முழு வளர்ச்சி பெற்ற எழுத்து
 மொழியைக்கொண்ட நாகரீகத்தை சேர்ந்தவர்கள் கணிதம் வானியல்
 கட்டிடக்கலை என பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கி.பி 150  இல் 
மாயன் நாகரீகம் உச்சத்தை  அடைந்து
 பின்பு விழ்ச்சி    அடைந்தது ..இவர்களின் எதிர்வு கூறல்கள், சூரிய
 சந்திரனின் சுற்றல் காலத்தை முன்பே கணித்தமை போன்ற பல
விடயங்களை செய்திருக்கிறார்கள் ...இவர்களின் இத்திறமைகள் பற்றி தனி
கட்டுரை எழுதலாம் ...ஆனால் உலக அழிவைப் பற்றி எதிர்வு
 கூறியவர்களால் தமது நாகரீக அழிவைப்பற்றி எவ்வாறு அறியாமல்
போனார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது ..........

மாயன் இனத்தவர்கள் 3 காலேண்டர்களைப் பயன்படுத்துகின்றார்கள் ,
இதில்  ஒரு வருடம் 260 நாட்களைக் கொண்டது ,20 வாரம்கள் ,ஒவ்வொரு
 மாதமும் 13 நாட்களை உடையது இதில் ஒவ்வொரு வாரமும் விசேட
பெயரையும் குறியீட்டையும் கொண்டது  

  Solar காலேண்டர்-

இது எமது நடைமுறை காலேண்டேரில் உள்ளது போல் 365 நாட்கள்  ஆனால்
 18 மாதங்கள் ஒவ்வொருமாதமும் 20 நாட்களை உடையது இங்கு
 ஒவ்வொரு மாதமும் ஒரு விசேட பெயரைக்கொண்டது
 
Long count calendar-

 முதல் இரு காலேண்டேர்களும் நேரத்தினூடக கணிக்கப்படுகின்றது  ஆனால்
 இது சமன்படுகளுடன்தொடர்புடையது இது காலேண்டர் முதன் முதலில்
தொடங்கியது முதல் தற்போதுள்ள  காலம்  வரைகணக்கிடப்பட்டுள்ளது. சற்று வித்தியாசமான முறை நாம் 
1000,100,10,1 என பெருக்கங்களை எழுதுவோம் அவர்கள் (0-12)(0-19)(0-19)(0-17)


(0-20)
என்றவாறு கணிப்பார்கள் ஒரு ஒற்றுமை இரண்டும் இடமிருந்து வலம் நோக்கி இருக்கிறது ...அடுத்தடுத்த இலக்கங்களை வேறுபடுத்திக்காட்ட இலக்கங்களுக்கிடையில் புள்ளிகளை இட்டுள்ளார்கள் ...

1வது 1 இன் பெருக்கமாக இடப்படும்
2வது 20 இன் பெருக்கமாக இடப்படும்
3வது 360 இன் பெருக்கமாக இடப்படும்
4வது 7200 இன் பெருக்கமாக இடப்படும்
5 வது 144 000 இன் பெருக்கமாக இடப்படும்

இம்முறையில் கணக்கிடும்போது 4.12.5.9.0 என்ற இலக்கத்தை கருதினால் (4×144000)+(12×7200)+(5×360)+(9×20)+(0×1)  =664 380
இப்படியே இலக்கம் தொடர்ந்து செல்கையில் ஒரு கட்டத்தில்
12.19.19.17.20 என்ற இலக்கம் தோன்றும் இதன் பின்பு இது 0.0.0.0.0 என்று மாறும்

இதை  சிலர் 13.0.0.0.0 என்றும் குறிப்பிடுகின்றனர் . இதன் நாட்களை கணக்கிட்டால் 1,872,000 நாட்கள் வரும்
அதாவது 5125.36 வருடங்கள் ஒவ்வொரு 5125.36 வருடங்களுக்கும் இலக்கம் மீண்டும் 0  இல் இருந்து தொடங்கும்

இந்நாளில் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் உருவாகும் என்று கூறியுள்ளார்கள் மாயன் இனத்தவர்கள் ..


அனால்  ஒரு  பிரச்சனை  உள்ளது நாம் தற்போது ஆங்கிலகாலேண்டர் ,தமிழ் காலேண்டர் என இரண்டு காலேண்டேர்களை பயன்படுத்துகின்றோம் இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு திகதி  மாதம் போன்றவை வேறுபடும் இதே போல் மாயன் காலேண்டேருக்கும் நாம்  நடைமுறையில்  பயன்படுத்தும்  காலேண்டேருக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு அது குறிப்பிடும் திகதி நேரம் வருடம் என்பன நாம் நடைமுறையில் பயன்படுத்தும் காலேண்டேரின் எக்காலப்பகுதியை
....குறிக்கின்றது என்பதே அது
அதற்கும் பதில்  உள்ளது புதைபொருள்அராய்ச்சியாளர்கள்  ஒரு விடயத்தை கண்டறிந்துள்ளார்கள்அதாவது  12.19.19.17.20
நமது நடைமுறை காலேண்டேருக்கு மாற்றி உள்ளார்கள் அப்படி மாற்றும்போது  போது  தலை சற்று சுற்றுகிறது பதிலாக வந்தது   21st,dec,2012


இதற்கு சான்றாக அரச்சியாளர்கள் கண்டுபிடித்த தடயம்  ஒரு கல்வெட்டு  அதன் பெயர்   “Comalcalco brick”
இந்த துண்டில் 13 வது  பற்றி "Baktun " குறிப்பிடப்பட்டுள்ளது  மாயன்
இனத்தவர்களின் கணிப்பில் ”Baktun”என்பது 394 வருடங்களை கொண்டது.
இதில் மூன்றாவது சித்திர  எழுத்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அது
கூறுவது என்னவென்றால் “HE/SHE/IT WILL ARRIVES”
இதே போல் வேறு ஒரு செதுக்கப்பட்ட கல்லும் கிடைத்துள்ளது அதன் பெயர்
  “Tortuguero” இரண்டு செதுக்கல்களும் 1300 வருடங்கள் பழமையானவை
 இவைகளுக்கிடையில் புலப்படாத தொடர்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்   

இரண்டாவது கல்வெட்டு இல் நடப்பவற்றில் “Blon yokte” இன் தலையீடு பற்றி குறிப்பிடுகின்றது
இவர் மாயன் இனத்தவர்களின் ஆக்குதலுக்கும் அழித்தலுக்குமான    கடவுள் எனக்குறிப்பிடப்பட்டுளது  துரதிஷ்டவசமாக எமக்கு கிடைத்த இவ்விருதுண்டுகளும் ஒரு சிறிய பகுதிதான் ....
அனால் காலண்டரின் முடிவில் உலகம் அழியும் என்பது பற்றியோ

உயிர்களின் வாழ்கை முடியும் என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை

அனால் பெரும் மற்றம் நிகழும் என்பது பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post