http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com இழந்த கோப்புகளை மீள் பெறுவதற்கு

a

கணணியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம்.
அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலையோ அல்லது நம்முடைய கவனக்குறைவினாலையோ நீக்கி விடுவோம். ஒரு சில சமயங்களில் நம்முடைய கணணியில் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம்.
ஆனால் அவர்கள் நம்முடைய கணணியில் உள்ள கோப்புகளை தவறாக அழித்து விடுவார்கள். அவ்வாறு நாம் இழந்த கோப்பானது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். அவை நமக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது. அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த சேமிப்பு சாதனத்தில் இருந்து தகவலை இழந்துள்ளீர்கள் என்பதை தேர்வு செய்யவும். பின் கணணியில் இணைக்கப்பட்ட வன்பொருள்களின் வரிசை தோன்றும். அந்த வரிசையை தேர்வு செய்து இழந்த தகவல்களை மீட்டெடுத்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். மேலும் நாம் இழந்த தகவல்களை மிக விரைவாக மீட்டெடுக்க உதவும். வன்தட்டு, ப்ளாஷ் ட்ரைவ், மெமரி டிவைஸ், சீடி/டிவிடி மேலும் இதர வன்சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டுக் கொள்ள முடியும்.
இழந்த தகவல்களை மீட்டெடுத்து அதை தனியாகவும் சேமித்துக் கொள்ள முடியும். விண்டோஸ் தளத்திற்கேற்ற மென்பொருள் ஆகும்DOWNLOAD HERE

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post