சாதரணமாக் நாம் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு
வலைமனையில் இருந்து பதிவிறக்கம் செய்வோம். இல்லையெனில் நேரடியாக
குறிப்பிட்ட வலைமனைக்கே சென்று அந்த குறிப்பிட்ட மென்பொருளை பதிவிறக்கம்
செய்வோம். இதனால் பல்வேறு பட்ட மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய
நினைப்பவர்களால் சரியாக மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. இதனால்
கால விரயம் மட்டுமே ஏற்படும். இதுபோன்று ஏற்படும் கால விரயத்தை தடுக்க
வேண்டுமெனில் ஒரே வழி மட்டுமே அனைத்து மென்பொருளையும் பதிவிறக்கம் செய்ய
குறிப்பிட்ட ஒரு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு
இருக்கும் தளத்திலும் ஒரு சில மென்பொருள்கள் கிடைக்காது. இந்த சிக்கலை
தீர்க்க DDownloads என்ற மென்பொருள் மூலம் மென்பொருள்களில் நேரடி தரவிறக்க
சுட்டியை இலகுவாக பெற முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் அன்ஜிப்
செய்துகொள்ளவும். பின் DDownloads எனும் சுருக்குவழியை பயன்படுத்தி ஒப்பன்
செய்யம். பின் DDownloads சாளரப்பெட்டி ஒப்பன் ஆகும். அதில் நீங்கள்
விரும்பும் மென்பொருள் பிரிவுக்கு சென்று வேண்டிய மென்பொருளை பதிவிறக்கம்
செய்து கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷன் உதவியுடன் சிறிய மென்பொருளிலில் இருந்து, இயங்குதளம் வரை நேரிடையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் போர்ட்டபிள் மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் 400+ மேற்பட்ட மென்பொருளை இலகுவாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்