அகராதி என்பது நமக்கு தெரியாத பல வார்த்தைகளுக்கு விளக்கங்களை கொண்ட
களஞ்சியமாக இருக்கும். இதனால் இதுபோன்ற அகராதிகளை மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்வியறிவு கொண்ட அனைவருமே பயன்படுத்துவார்கள். தீடிரென ஒரு
வார்த்தையை கேள்விபடுவோம் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது எங்கு
தேடினாலும் கிடைக்காது. அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தத்தை கண்டறிய
வேண்டுமெனில் ஒன்று இணையத்தை நாட வேண்டும் இல்லையெனில் அகராதியை
நாடிச்செல்ல வேண்டும்.
சாதாரணமாக அச்சிட்ட அகராதிகள் பல உள்ளன. அவற்றை கொண்டு ஒரு குறிப்பிட்ட
வார்த்தையை தேடும் போது நேரம் செலவாகும். அதை குறைக்க கணினியில் அதே
அகராதியை பயன்படுத்தினால் நேரம் மிச்சமாகும். அவ்வாறு உள்ள அகராதி
மென்பொருள்தான் Lingoes.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில்
நிறுக்கொள்ளவும். இந்த மென்பொருள் போர்ட்டபிளாகவும் கிடைக்கிறது. மேலும்
இந்த மென்பொருள் உதவியுடன் மொழிபெயர்ப்பும் செய்துகொள்ள முடியும்.
மேலும் கரன்சி கன்வெர்ட்டரும் இந்த மென்பொருளில் உள்ளது. எண் வடிவிலான நாணய
இலக்கங்களை எழுத்து வடிவாக மாற்றவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்