http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க (Reset)

a

உலாவிகளில் முதலிடத்தில் இருப்பது நெருப்புநரி உலாவி ஆகும். இந்த உலாவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக நீட்சிகளை கூறலாம். நெருப்புநரி நீட்சியின் உதவியுடன் பல்வேறு பணிகளை செய்ய முடியும். இந்த உலாவியை பயன்படுத்துகையில் சில நேரங்களில் கோளாரு ஏற்படும். அதுபோன்ற கோளாருகளை சரிசெய்ய நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க வேண்டும்.
நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க நெருப்புநரி உலாவியிலேயே வழி உள்ளது. இதனை செய்ய முதலில் நெருப்புநரி உலாவியை திறக்கவும். பின் Help > Troubleshooting Information எனும் வரிசையில் மெனுவினை தெரிவு செய்யவும்.  அல்லது அட்ரஸ் பாரில் about:support என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Rest Firefox என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து தோன்றும் சாளரப்பெட்டியில் உள்ள Rest Firefox பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் நெரிப்புநரி உலாவி சில நொடிகளில் மீட்டமைக்கப்படும். மீட்டமைக்கும் போது புக்மார்க், ஹிஸ்ட்டரி, சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள் போன்றவைகளும் அழிக்கப்பட்டு மீட்டமைக்கப்படும்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post