நெருப்பு நரி (FireFox) உலாவியில், நமக்கு விருப்பமான காணொளிகளை Youtube, Google Video, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களிலிருந்து கண்டு களிக்கிறோம். இவ்வாறு நாம் காணொளிகளை பார்த்தபடியே, வேறு எந்த வலைப் பக்கங்களையும், பார்வையிட முடியாது. இதற்கான சரியான தீர்வாக அமைவது நெருப்புநரி உலாவிக்கான YouPlayer நீட்சி!
இந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, உங்கள் நெருப்புநரி உலாவியில், Status Bar இல் YP என்ற குறியீடு வந்திருப்பதை கவனிக்கலாம். இந்த குறியீட்டை க்ளிக் செய்வதன் மூலமாக YouPlayer ஐ திறக்கவோ மூடவோ இயலும். இந்த வசதி உலாவியில் இடது புற sidebar இல் திறக்கும். இங்கு நீங்கள் விரும்பும் வீடியோக்களுக்கான URL ஐ Drag & Drop செய்தால் போதுமானது.
Youtube மட்டுமின்றி, Google Video, Daily Motion, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களை தேர்வு செய்ய, நெருப்பு நரி உலாவியின், வலது கீழ்புற மூலையில் உள்ள சிறிய பொத்தானை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், இதிலுள்ள Playlist வசதியின் மூலமாக, நாம் டேப்களில் திறக்கும், வீடியோ லிங்குகளை sidebar Playlist இல் Drag & Drop செய்து கொள்ளலாம்.
இதன் Options பகுதிக்கு சென்று, ‘Use new player (experimental)’ option ஐ தேர்வு செய்வதன் மூலமாக, நமது கணினியில் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள, FLV கோப்புகளை Playlist ல் Drag & Drop செய்து, கண்டு களிக்கலாம்.
இவ்வாறு நமக்கு தேவையான வீடியோக்களை சைடுபாரில் கண்டுகளித்தபடியே, இணையத்தில் உலாவமுடியும். இந்த நீட்சியிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்வாறு கண்டு களிக்கும் வீட்யோக்களை Playlist இல் வலது க்ளிக் செய்து Download பொத்தானை அழுத்தி நமது கணினியில் சேமித்துக் கொள்ளவும் இயலும்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்